சென்னை: முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சியை மீட்டெடுத்து பணிகளை துரிதப்படுத்த, தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்த உமாமகேஸ்வரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி …
Read More »மழை தீவிரம்.. 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாநில பேரிடர் மேலாண்மைத்துறை!
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பருவமழை சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை …
Read More »நடைபயிற்சிக்கு சென்ற அரசு வழக்கறிஞர் மின்சாரம் பாய்ந்து பரிதாப உயிரிழப்பு @ சென்னை
ஆவடி: சென்னை – அம்பத்தூர் அருகே பாடி, யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் குமார் (57). திமுக பிரமுகரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். சம்பத்குமார், நாள்தோறும் கொரட்டூர், ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், நேற்று நடை பயிற்சிக்கு சென்ற போது மழை பெய்ததால் சம்பத் குமார், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் முன்பு …
Read More »புயல் வேகத்தில் செயல்படும் அரசு நிர்வாகம் – உடனுக்குடன் வெளியேற்றப்படும் மழைநீர் : மக்கள் நிம்மதி!
சென்னை: சென்னையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குக் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை வேகப்படுத்தினர். அதேபோல் போக்குவரத்து போலிஸாரும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் கனமழையால் …
Read More »“டி20 உலகக்கோப்பை வெல்ல டிராவிட் இருக்க வேண்டும்” – பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து கம்பீர்!
சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.rahul dravid ராகுல் …
Read More »ஃபுல் ஃபோர்ஸில் இறங்கிய சென்னை குடிநீர் வாரியம்.. கழிவுநீர் புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை …
Read More »ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் 358 பள்ளிகளில் காலை உணவு திட்டம்: சென்னை மாநகராட்சி அனுமதி
சென்னை: சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா, மேல் மருத்துவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மவுன …
Read More »தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
சென்னை: மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்படுகின்றன. இதற்கிடையே, அவருக்கு சிறுநீரக மாற்று …
Read More »சென்னை, புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – மழைநீர் தேங்கியதால் சாலைகளில் நெரிசல்
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. நேற்று காலை முதலே தென் சென்னை மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மாநகரப் பகுதியில் விட்டுவிட்டு மழை …
Read More »அனைத்து மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்னம், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து எம்சாண்ட், ஆற்று மணல் போன்றவற்றை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை …
Read More »