சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவில் புதிய நடைமுறை இன்று முதல் டிச.1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.. இதன்படி இனிமேல் அடுக்குமாடி குடியிருப்பின் பிரிக்கப்படாத பாகம், கட்டிடம் என இரண்டையும் சேர்த்து தான் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள நடைமுறைப்படி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான …
Read More »1.50 லட்சம் பேர்.. தமிழகத்தை விட்டு திடீரென வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள்!
சென்னை: தமிழகத்தில் இருந்து திடீரென 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் பணி செய்து வருகின்றனர். பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பமாக தமிழகம் வந்து பணியாற்றி வருகின்றனர். தங்களின் மாநிலங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத …
Read More »“எல்ஐசி ஜீவன் உத்சவ்” புதிய திட்டம் அறிமுகம் – சிறப்பு அம்சம் என்ன?
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் `எல்ஐசி ஜீவன் உத்சவ்’ எனும் புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்ஐசி ஜீவன் உத்சவ் என்பது ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது உள்ளவர்கள் வரை பயன்பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு …
Read More »பால் கொள்முதல் விலை உயர்வு; முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை: தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், தமிழக பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இணையம், ஆவின் தொகுப்பு பால் குளிரூட்ட நிலைய சங்கப் பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் நாம் தமிழர் மாநில தொழிற்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆலோசனை நடத்தினார். இதில், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை அதிகரிப்பது, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, பால் உற்பத்தியாளர்களுக்கு …
Read More »மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப தலைவர்கள் வாழ்த்து
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த், கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை நிர்வாகம், ‘விஜயகாந்த உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இதையொட்டி இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட …
Read More »செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது. தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு …
Read More »அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்டதடையை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வரும் டிச.11 வரை ஏற்கெனவே பிறப்பித்ததடையை ஓபிஎஸ் தரப்பும் மீறக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை …
Read More »பேரவைச் செயலருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு: முதன்மைச் செயலராக பதவி உயர்வு
சென்னை: சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்புடன் முதன்மை செயலராக பதவி நிலையை உயர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலராக இருப்பவர் கி.சீனிவாசன். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை செயலராக இருந்த ஜமாலுதீன் பணி ஓய்வைத் தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை செயலராக பூபதி நியமிக்கப்பட்டார். அவர் 2018-ம் ஆண்டு பிப். 28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, …
Read More »அதிமுக பெயரில் கே.சி.பழனிசாமி இணையதளம் நடத்த தடை
சென்னை: இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை (Internet Exchange of India -NIXI) நடுவரிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில், அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான கே.சி.பழனிசாமி, 2021 முதல் தனது இணையதளத்தில் கட்சி பெயரையும், சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, பழனிசாமி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகும் பழனிசாமி, கட்சியின் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அதிமுக தரப்பில் …
Read More »மழைநீர் தேங்கிய பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் விநியோகம் @ சென்னை
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மக்கள் பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்துவதை உறுதி செய்ய, அங்குள்ள குடியிருப்புகளுக்கு தேவையான அளவு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் களப்பணியாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும்1000 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலம் என்பதால் தினசரி 300 இடங்களுக்கு பதிலாக600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப் …
Read More »