Breaking News
Home / செய்திகள் / அதிமுக பெயரில் கே.சி.பழனிசாமி இணையதளம் நடத்த தடை

அதிமுக பெயரில் கே.சி.பழனிசாமி இணையதளம் நடத்த தடை

சென்னை: இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை (Internet Exchange of India -NIXI) நடுவரிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில், அதிமுகவின் முன்னாள் உறுப்பினரான கே.சி.பழனிசாமி, 2021 முதல் தனது இணையதளத்தில் கட்சி பெயரையும், சின்னத்தையும் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, பழனிசாமி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகும் பழனிசாமி, கட்சியின் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அதிமுக தரப்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த நவ.29-ம் தேதி அளித்த தீர்ப்பில், ‘பழனிசாமி மற்றும் அவரது முகவர்கள், வேலையாட்கள், டீலர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோர் www.aiadmk.org இணையதள பெயரை பயன்படுத்தக் கூடாது. பழனிசாமி, ரூ.50 ஆயிரத்தை அதிமுக கட்சிக்கு செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *