Breaking News
Home / செய்திகள் (page 68)

செய்திகள்

கல்வி கட்டணத்துக்காக கொண்டு சென்றபோது ஆட்டோவில் தவறவிட்ட ரூ.16 லட்சம் மீட்பு: 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீஸார்

சென்னை: கல்விக் கட்டணத்துக்காக ஆட் டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் தவறியது. அதை 12 மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (52). இவர், சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரில் வசிக்கும் தனது சகோதரர் வெங்கடேசனை பார்க்க 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். அங்கிருந்து விருகம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் தாமோதரனை சந்திக்க நேற்று முன்தினம் சென்றார். அவரை சந்தித்த பின்னர், …

Read More »

“எண்ணூர் மீனவ குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்குக” – இபிஎஸ்

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், வெள்ளநீர் கழிவுகளுடன் கலந்து எண்ணூர் …

Read More »

டிச. 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச. 25) முதல்வரும் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28-ம்தேதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் …

Read More »

அதிமுகவின் அணிகளை இணைக்க முடியும்: வி.கே.சசிகலா நம்பிக்கை

சென்னை: அதிமுகவின் அனைத்து அணிகளையும் இணைக்க முடியும் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது: அரசு எதற்கெடுத்தாலும் பணம்இல்லை என சொல்கிறது. ஆனால், தமிழக அரசு, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, தனியார் பங்களிப்பு என மொத்தம் ரூ.240 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர். இதற்கான தொகை எங்கிருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன், ஆனால் பேரிடரின்போது …

Read More »

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு நாள்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்36-வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின்36-வது நினைவு தினம் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, …

Read More »

வேகமாக பரவும் புதிய கரோனா வைரஸ்: சென்னை, கோவையில் பரிசோதனைகள் அதிகரிப்பு

சென்னை: புதிய வகை கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்குபாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். இத்தகைய சூழலில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் …

Read More »

சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்று மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

சென்னை: கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்று மீனவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் விவகாரத்தில் முதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் வெவ்வேறு விதமாக பேசுகின்றனர். இதற்கு தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். அதை கொடுக்க ஏன் பயப்பட வேண்டும். தென்தமிழகத்தைப் பொருத்தவரை வாய்க்கால்களை …

Read More »

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: ‘கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயலை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’என்பதுபோல, தனிமனிதர் உள்ளத்தை பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய …

Read More »

வானிலை மைய கருவிகள் உலகத்தரத்துக்கு ஒப்பானது; தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பயன்பாட்டில் இருக்கும் கருவிகள், உலகத் தரத்துக்கு ஒப்பானவை என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிக அளவு மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்துக் கூறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, …

Read More »

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார், மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி விஜயகுமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையர் …

Read More »