சென்னை: அதிமுகவின் அனைத்து அணிகளையும் இணைக்க முடியும் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:
அரசு எதற்கெடுத்தாலும் பணம்இல்லை என சொல்கிறது. ஆனால், தமிழக அரசு, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, தனியார் பங்களிப்பு என மொத்தம் ரூ.240 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர். இதற்கான தொகை எங்கிருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன், ஆனால் பேரிடரின்போது மக்களை மீட்க போர்க்கால அடிப்படையில் பணிகளைச் செய்யவில்லை. விளம்பரத்தை மட்டுமே திமுக அரசு நம்பியிருக்கிறது. கல்விக் கடனை ரத்து செய்யவில்லை.
பால் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக மக்களை காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது. இங்கு திமுக ஆட்சி தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் வரும். அதை மக்களும் உணர்ந்துள்ளனர். தற்போது திமுக அரசு தெளிவில்லாமல் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்களை திருத்தி கொண்டுவாக்களித்த மக்களை வஞ்சிக்காமல் இருக்க வேண்டும்.
அதிமுகவின் அனைத்து அணிகளையும் சேர்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கருத்துகளை நிறைவே
ற்றும் பொறுப்பு பிரிந்த அனைத்து அணியினருக்கும் இருக்கிறது. விரைவில் நல்ல முடிவு வரும்.