Breaking News
Home / செய்திகள் (page 118)

செய்திகள்

சென்னை பாரிமுனையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது: போலீஸார் விசாரணை

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரசாமி கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன் …

Read More »

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற பெயரில் யாத்திரை: 15-ல் பிரதமர் தொடங்கி வைப்பதாக எல்.முருகன் தகவல்

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக வரும் 15-ம் தேதி, ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற பெயரில் யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவனில் இயங்கிவந்த மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், பத்திரிகை பதிவு அலுவலகம் ஆகியவை தற்போது சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகம் அருகே மாற்றப்பட்டுள்ளது. ‘தகவல் மாளிகை’ …

Read More »

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 20 சதவீதம், 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த,சம்பள நிலுவையை வழங்க ரூ.63.61கோடி முன்பண கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், பணியாளர்கள் …

Read More »

சென்னையின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸார்: தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்நேற்று நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் சமூக விரோதிகள் …

Read More »

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு: நவ.15-ல் விசாரணை

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் புதன்கிழமை (நவ.15) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், …

Read More »

DD பொதிகை., ஜனவரி முதல் DD தமிழ்.! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.!

சென்னை : மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD …

Read More »

“அனகாபுத்தூரில் 3 தலைமுறை குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது மனிதமற்ற செயல்” – தினகரன்

சென்னை: ‘அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்துக்குரியது’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வலுக்கட்டாயமாக …

Read More »

‘தீபாவளி பரிசு காத்திருக்கு’.. 200 அதிமுக புள்ளிகளுக்கு எடப்பாடி திடீர் அழைப்பு! என்னனு பாருங்க!

சென்னை : சமூக வலைதளங்களில் அதிமுகவுக்காக தீவிரமாக களமாடும் தொண்டர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி ‘கிஃப்ட்’ கொடுக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த வழக்கம் நின்று போனது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, சில அமைச்சர்கள், பொங்கல் பண்டிகையின்போது, கட்சியின் கிளை செயலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தனர். அதிமுக ஆட்சியில் …

Read More »

அதுதான்.. இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கு’.. அண்ணாமலை

சென்னை : சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அண்மையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த சுவடு கூட மறையவில்லை.. மீண்டும் அதேபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. …

Read More »

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் புத்தாடை வாங்க கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களை கட்டியது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை …

Read More »