சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை குறித்த மனு மீதான விசாரணைக்கு வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 21ம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இறையயூர், வேங்கைவயல், காவிரி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.
Read More »உங்க ஏரியாதான இது! இங்கேயே இப்படி நடந்தா எப்படி? மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்
சென்னை: புயல் மழை நின்று 4 நாட்கள் ஆன பின்னரும் சென்னையில் சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. அதேபோல வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பெரம்பூரில் உள்ள மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்ட பொதுமக்கள், குடிநீர், மின்சாரம் குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர். வடசென்னை என்பது சாதாரண மழைக்கே ஒரு மாதிரி ஆகிவிடும். அப்படி இருக்கையில், கடந்த 4ம் தேதியன்று ஒரே …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..!!
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெறும் மழை, வெள்ளம் மீட்பு பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை பொழிய செய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் …
Read More »மிக்ஜாம் புயல் ஏதிரோலி: தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும் அரசின் நிவாரணப் பணிகளுக்கு தோளோடு தோள் நிற்கும் விதமாக தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பானது தமிழக வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் மோசமான இயற்கைப் பேரிடராகும். தமிழ்நாடு அரசு. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோ …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு.. மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க முன்வந்துள்ளது TVS நிறுவனம்..!!
சென்னை: மழை, வெள்ளத்தால் பழுதான இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்க TVS நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதிலிருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகின்றனர். ஆனால் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்களும், கார்களும் அதிகமான அளவில் சேதமடைந்துள்ளன. இந்த சூழலில் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் ஆடி, …
Read More »“ஸ்டாலின் மாடலை” கையில் எடுத்த.. தெலுங்கானா சிஎம் ரேவந்த் ரெட்டி.. வந்த முதல் நாளே அதிரடி கையெழுத்து
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் ஒன்றை தெலுங்கானாவில் கொண்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டிக்கு பதவியேற்பு செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை. தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் …
Read More »சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை: “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளிக்கிழமை வழங்கினார். மேலும் மழை – வெள்ளத்தால் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் அவர் ஆய்வு செய்தார். …
Read More »பேரிடர் நிவாரண நிதி | மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சிப்பது முறையல்ல: தமிழக பாஜக
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் ‘மாநில பேரிடர் நிவாரண நிதி’ வழங்குவதில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்றும், தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் நீட்டி முழக்கி மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சிப்பது முறையல்ல என்றும் தமிழக பாஜக கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் …
Read More »சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் சனிக்கிழமை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை …
Read More »வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் …
Read More »