சென்னை: தமிழகத்தில் உயர்மட்ட ஊழல் வழக்குகள் மீதான விசாரணையை தடுக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுவதாக அமலாக்கத் துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும்அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளிடம் விசாரணை செய்தனர். மேலும், 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். …
Read More »திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்
சென்னை: திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்த கோபி கிருஷ்ணா என்பவர் 10-ம் வகுப்புக்குப் பிறகு நேரடியாக …
Read More »`பாஜக கூட்டணியில் இல்லை’… அதிமுக கூட்டணியில் யார் யார் நிற்கிறார்கள்?!
முன்னதாக பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி தொடர்பாகத் தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியால் அதன் முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்டபோதும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க-வின் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் விமர்சித்தபோதும் தலைவர்கள் மூலம் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது அ.தி.மு.க. ஆனால், அண்ணா, பெரியார் என பா.ஜ.க-வின் விமர்சனங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு …
Read More »அரசு மரியாதையுடன் இன்று விஜயகாந்த் உடல் அடக்கம்
சென்னை: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீவுத்திடலில் அஞ்சலி: பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், கலைத் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, விஜயகாந்த் உடல், சென்னை தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் …
Read More »ஆன்லைன் உணவு, மளிகை விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘கிக்’ பணியாளர்கள் நலவாரியத்தை தோற்றுவித்தது தமிழக அரசு
சென்னை: இணையம் சார்ந்த உணவு, மளிகைப் பொருட்கள் விநியோகம், வாடகை வாகன சேவைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ‘கிக்’ நலவாரியத்தை தோற்றுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறையுடன் இந்த அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை …
Read More »எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை: எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் “உலக எய்ட்ஸ் தினம் 2023” நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தமிழகத்தில் முதல் முறையாக எச்ஐவி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவியை அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கு …
Read More »ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்
சென்னை: ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெல்டிங் பணியின்போது இந்த சோக நிகழ்வு நடைபெற்றதாக தகவல் வெளி யாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தண்டையார்பேட்டையில், மத்தியஅரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) எண்ணெய் சுத்திகரிப்பு மையம்செயல்பட்டு வருகிறது. கப்பல் களில் வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை இங்கு குழாய்கள் மூலம்கொண்டுவரப்பட்டு பாய்லரில் (எத்தனால்) சேமித்து வைக்கப்படுகிறது. …
Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அணியின் மாநில துணை …
Read More »குற்ற வழக்குகளில் குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு
சென்னை: குற்ற வழக்குகளில் குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி மரணமடைந்தார். இதையடுத்து தனது கணவரின் இழப்புக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி வசந்தி சென்னை மோட்டார் …
Read More »சென்னை உட்பட 6 ரயில்வே கோட்டங்களில் ரயில் நிலைய ஆலோசனை குழு அமைகிறது: தீவிர முயற்சியில் தெற்கு ரயில்வே
சென்னை: ரயில் பயணிகளுக்கு வழங்கும் அடிப்படை வசதிகள், சேவைகளை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலைய ஆலோசனைக் குழுவை சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் அமைக்கும் முயற்சியை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த ரயில்வே கோட்டங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், ரயில் …
Read More »