சென்னை: சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து …
Read More »சென்னையில் மருத்துவமனைகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற மிக முன்னுரிமை! களத்தில் அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: சென்னையில் மருத்துவமனைகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற மிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு அந்தப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக களமிறங்கி கவனித்து வருகிறார். சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கிண்டி கிங்ஸ் அரசு மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் அதனை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதே போல் சென்னையில் இன்னும் பல பகுதிகளில் மருத்துவமனைகளை சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் …
Read More »“இன்று மாலைக்குள் மின்விநியோகம் முழுமையாக சீர் செய்யப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு
‘இன்று மாலைக்குள் மின்விநியோகம் முழுமையாக சீர் செய்யப்படும்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. ஏற்கனவே சென்னை, …
Read More »சென்னையில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன்?: பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கம்
சென்னை: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. சென்னையில் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் இன்று பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சென்னையில் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாதது ஏன் என பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்த நிலையில் பெட்ரோல் …
Read More »மிக்ஜாம் புயல்: `2015-ல் செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்..!’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக உருமாறியது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டன. பலத்த மழை, தொடர் காற்று, வேகமாக நிரம்பிய ஏரிகள், வெளியேற்றப்படும் நீரை உள்வாங்காத கடல் என சென்னையைத் தலைகீழாக்கியிருக்கிறது இந்தப் புயல்.முதல்வர் ஸ்டாலின் நிவாரணப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மற்றப் பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுச் சீரமைப்புப் …
Read More »தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு. அரசு புதிய அதிரடி அறிவிப்பு.!!!
சென்னை: தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பொது தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வு பணிகளை விரைவில் தொடங்க மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் 11 மற்றும் 12 ஆம் …
Read More »“அனைத்து சமூக மக்களும் தங்கலாம்; 150 கிலோ அரிசி கொண்டு உணவு ஏற்பாடு” – பூந்தமல்லி மசூதி அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், ‘அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் …
Read More »மிக்ஜாம் புயலுக்குப் பின்.. சென்னை சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை என்ன?
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் இன்று காலை 7.45 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் …
Read More »புயல் மீட்பு, நிவாரணத்துக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மீட்டி நிவாரணப் பணிகளுக்கு எ.வ.வேலு, முத்துசாமி,மூர்த்தி உட்பட 7 அமைச்சர்களை கூடுதலாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தொடர்ந்து …
Read More »மழை படிப்படியாகக் குறையும், காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்த சூழலில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டதால் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை மாநகரம் …
Read More »