Breaking News
Home / செய்திகள் (page 59)

செய்திகள்

`மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு சுருட்டுகிறதா?’- திமுக குற்றச்சாட்டும் பாஜக பதிலும்!

`தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் நாம் 1 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் நிவாரண நிதி கேட்டால் மத்திய அரசு வெறும் 5000 கோடியைத்தான் ஒதுக்கியிருக்கிறது’ என தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறது. `அப்படியென்றால்… நாங்கள் கொடுக்காத நிதியை நீங்கள் எப்படி கொடுத்து சமாளித்தீர்கள்… கணக்கு காட்டுங்கள்?’ என பா.ஜ.க-வும் கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் …

Read More »

திமுகவுக்கு தித்திக்கும் செய்தி.. நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்துக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவப் படிப்புகளுக்காக மத்திய அரசு நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்து உயிரிழந்து வரும் நிலையில் அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் ‘நீட் …

Read More »

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?- அன்புமணி கேள்வி

அன்புமணி சென்னை: அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தவும், ஆண்டுக்கு …

Read More »

கட்டுமான நிறுவனம் தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: கட்டுமான நிறுவனம் தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Read More »

யானைப்பசிக்கு சோளப்பொறி!: சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒன்றிய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.3273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்டமதிப்பில் வெறும் 5% மட்டுமே. குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான …

Read More »

Realme இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme கடந்த மாதம் Realme C67 5G ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் விரைவில் நாட்டில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது Realme 12 சீரிஸ் அல்லது Realme GT 5 Pro ஆக இருக்கலாம். நாட்டில் உள்ள நிறுவனத்தின் பிரிவு புத்தாண்டு அன்று சோசியல் மீடியா தளமான X இல் ஒரு …

Read More »

இணையத்தில் வைரலாகும் விஜய் இரட்டை வேடங்களில் காட்சியளிக்கும் தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், “The Greatest Of All Time” என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் …

Read More »

கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்… நீங்க எதிர்பார்ப்பதை விட இதில் நிறைய அதிசயங்கள் இருக்கு…!

கிராம்பு தேநீர் ஒரு மகிழ்ச்சியான மூலிகை தேநீர் மட்டுமல்ல, இது நமக்குத் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டப் பிறகு, இந்த நறுமணம் மற்றும் சுவை நிறைந்த பானம், உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். கிராம்பு, அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் திடீரென அதிகரிக்கும் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. …

Read More »

பொறியாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முற்றிலுமாக திரும்பவில்லை. இந்த மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் …

Read More »

மாநில அளவில் உணவுத் துறை செயலர் தலைமையில் நேரடி விற்பனையாளர் முகவர்களை கண்காணிக்க ஆணையம்

சென்னை: மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது மின் வணிகம் மற்றும்நேரடி வணிகத்தில் நியாயமற்ற வணிகநடவடிக்கைளில் இருந்தும் வாடிக்கையாளர்களை காப்பது, வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்றபல்வேறு அம்சங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேரடி வணிகம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில அரசும், நேரடிவிற்பனை முகமைகள், நேரடி விற்பனையாளர்களை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில் உணவுத்துறை செயலர் தலைமையில் …

Read More »