Breaking News
Home / செய்திகள் (page 53)

செய்திகள்

தமிழகத்தில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வரப்போகுதா? டாப் 10 நிறுவனங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காகவும் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், …

Read More »

மகேந்திரா நிறுவனத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் விரைவில் அறிமுகம் – ஆனந்த் மகேந்திரா

சென்னை: ‘சிறந்த முதலீட்டுக்கான இடம் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஆனந்த் மகேந்திரா பேசியதாவது: தமிழகத்தில் கல்வி மேம்பட்டு இருப்பதால், பணியாளர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி முனையத்தை சென்னையில் நிறுவுவதில் நான் ஆர்வம் காட்டினேன். தற்போது அது மகேந்திரா நிறுவனத்தின் பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மகேந்திரா நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு காலத்தில் மகேந்திரா நிறுவனம், டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் என்று மக்கள் …

Read More »

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவைத் தேர்தலின்போது, போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை …

Read More »

ஐபிஎல் தொடருக்குத் தயாராக இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, கோலி தேர்வா?

கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் ஆடிய பிறகு டி20 போட்டிகளில் ஆடாத விராட் கோலியையும் ரோகித் சர்மாவையும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்ததன் பேரில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. டி20 அணியில் இவர்கள் பணி முடிந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், மீண்டும் டி20-யிலும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் அவர்கள் வழியை அடைத்துக் கொண்டிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா, …

Read More »

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூடாதா? பதில் மனு எங்கே? எதுக்கு வழக்கு போட்டீங்க? EDக்கு நீதிபதி குட்டு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை …

Read More »

கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி முடிய தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக …

Read More »

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக வெற்றி நடைபோட உழைத்திடுவோம் – உதயநிதி

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு …

Read More »

“வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை” – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டு, ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் …

Read More »

ஆன்லைன் சூதாட்டம் | ”உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை தமிழக அரசு உடனே விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்”: அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரின் சமூக வலைதள பதிவில், “சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் …

Read More »

உலக முதலீட்டாளர்கள் மாநாடு | இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது; 300 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய அமர்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024’-ஐ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன.07) தொடங்கி வைத்தார். இதில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இம்மாநாட்டில், மத்திய வர்த்தகம் …

Read More »