Breaking News
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

இந்திய சுழலில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. …

Read More »

15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத 400+ காவல் அதிகாரிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காததால் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் …

Read More »

TNPSC குரூப் 1 தேர்வு முடிவு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I (குரூப்-I சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 முதல் ஆணையத்தால் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-1 தேர்வுக்கான முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் …

Read More »

இதை பண்ணாம தேர்தல் முடிவுகளை அறிவிக்கவே கூடாது.. தேர்தல் ஆணையத்துக்கு திருமா முக்கிய கோரிக்கை!

சென்னை: விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் …

Read More »

மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் காவல்துறையில் மகளிர் நியமனம் செய்யப்பட்டனர். பெண்களின் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Read More »

மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திட்டங்கள் என்ன?

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். …

Read More »

“திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது” – வைகோ முன்னிலையில் தீர்மானம்

சென்னை: மதிமுக நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று (07.03.2024 ) காலை 10 மணிக்கு ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தீர்மானம் 1: இந்திய நாட்டைச் சூழ்ந்திருக்கின்ற பாசிச இருளைப் போக்கி, ஜனநாயக வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு இமயம் முதல் குமரி வரை ஜனநாயக முற்போக்கு …

Read More »

திமுக கூட்டணி இறுதியாவதில் தாமதம் ஏன்? – காங்., மதிமுக, விசிகவுடன் தொடரும் பேச்சு

சென்னை: காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் கூடுதல் இடம் கேட்டு அடம் பிடித்து வருவதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாகி உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கிய கட்சி திமுக. இந்த முறை கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால், அதற்கு பதில் கமல்ஹாசனின் மநீமவை சேர்க்க முடிவெடுத்துள்ளது. மேலும், 23 இடங்களில் திமுக போட்டியிடவும், 17 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவெடுத்தது. …

Read More »

தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக …

Read More »

“பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது எஸ்பிஐ” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் முன்பாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்றும் பாஜகவின் ஊழலுக்குத் துணை போகும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஒலிக்கும் குரல் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலாக இருக்கப் போகிறது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஜூன் …

Read More »