சென்னை: மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் காவல்துறையில் மகளிர் நியமனம் செய்யப்பட்டனர். பெண்களின் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.