தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I (குரூப்-I சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 முதல் ஆணையத்தால் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-1 தேர்வுக்கான முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பிரதான தேர்வை 2,113 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.