சென்னை : நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்களை அமைத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் குறிப்பாக திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த …
Read More »பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு: கார் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி சென்னை வந்தபோது, அவரை வரவேற்க பாஜகவினர் ஆட்களை அழைத்து வந்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், அதே பகுதியை சேர்ந்த தேவி என்பவர் நேற்று புகார் அளித்தார். அதில், ‘‘என் தங்கை ஆண்டாள் பாஜகவில் நிர்வாகியாக உள்ளார். பிரதமர் சென்னை வந்த போது கோட்டூர்புரம், சித்ரா நகரிலிருந்து ஆட்களை அழைத்து …
Read More »மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
சென்னை: மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1942 இல் மகாத்மா …
Read More »நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் | மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
சென்னை: நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அவரது பனையூர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சமீபகாலமாக நடிகர் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 180க்கும் அதிகமான நிர்வாகிகள் …
Read More »மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வாட்ஸ் – அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டு: புதிய வசதியை மேலாண் இயக்குநர் அறிமுகம் செய்தார்
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்-அப் மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கானபுதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் பயணச் சீட்டுவாங்கும் பயணிகள், மின்னணுபயணச் சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, கவுன்ட்டர்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக், …
Read More »மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு மூலம் மீனவர் பிரச்சினையை தீர்க்கவும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜன.22-ல் கைது செய்துள்ளனர். இத்தகைய போக்கு, பதற்றமான சூழ்நிலையை …
Read More »கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும் விவகாரம்: அரசு உத்தரவை ஏற்க உரிமையாளர்கள் மறுப்பு – கோயம்பேட்டில் போலீஸ் குவிப்பு
சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மறுத்து சிஎம்டிஏ, காவல் துறை அதிகாரிகளுடன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் தர வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜன.24-ம் தேதி (நேற்று) முதல் …
Read More »ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு
சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர், மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்து வருகிறார். ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக ஜன.26-ம் தேதி அவர் அளிக்கும்தேநீர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறோம். …
Read More »சென்னை சாலைகளை புதுப்பிக்க ரூ.810 கோடியில் டெண்டர்: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் புதிய திட்டங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: …
Read More »அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது
சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பணிக் குழுக்களை அமைத்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் மக்களை சந்திக்கும்போது, அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் முக்கிய பங்காற்றும். அதனால் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஒவ்வொரு கட்சியும் முக்கிய கவனம் செலுத்தும். அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் …
Read More »