Breaking News
Home / செய்திகள் (page 27)

செய்திகள்

அமைச்சர்களுக்கு எதிரான சொ.கு. வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி

சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற …

Read More »

“மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார் பிரதமர் மோடி” – முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: “மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதல்வர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம்” என்று மத்திய அரசைக் கண்டித்து டெல்லி …

Read More »

சிறுபான்மையினர் குறித்து அண்ணாமலை அவதூறாக பேசிய வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச …

Read More »

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பதற்றம் வேண்டாம் புரளி என காவல்துறை விளக்கம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிகளில் குவிந்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு அப்பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து …

Read More »

கிளாம்பாக்கத்தை போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், “சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றவும், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கம் …

Read More »

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் உருமாற்றம் : மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தல்!!

சென்னை : தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓர் ஆண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்று பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். …

Read More »

15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர். பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் கடந்த …

Read More »

வழக்கறிஞர்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்: மேகாலயா தலைமை நீதிபதியாகும் எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தலைமை வகித்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மாநில …

Read More »

மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினருடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-ம் நாளாக ஆய்வு

சென்னை: அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது, தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். முதலில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பின் …

Read More »

பெருங்குடியில் 50 ஏக்கர் நிலம் மீட்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180-வது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2-வது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணியை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவான்மியூர் கடற்கரைச் சாலையில் அங்குள்ள வியாபாரிகளிடம் கடையின் முகப்பில் குப்பைத் தொட்டி வைத்து, அதில் குப்பையைப் போடவும் அறிவுறுத்தினார். பெருங்குடி மண்டலம், 184-வது வார்டில் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை …

Read More »