Breaking News
Home / செய்திகள் (page 107)

செய்திகள்

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு “கோவிட் பணி” சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022, அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் …

Read More »

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உள்ளிட்ட 11 ஊராட்சிகளில், 3,174ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து `மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம்’ சார்பில் கடந்த ஜுலை 2-ம் தேதிமுதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேல்மா கூட்டுசாலையில் பந்தல் அமைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். மேலும், …

Read More »

ராகுல் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக மழையில் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் போர்வை…

ராகுல் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக மழையில் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் போர்வைகளை தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு A. ஜோதிபொன்னம்பலம் அவர்கள் முன்னின்றி அறக்கட்டளையின் தன்னார்வலர்களுடன் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் பகுதிகளில் நேரில் சென்று கொடுத்து உதவினார்.

Read More »

ஓபிஎஸ் மலைபோல் நம்பும் கேஸ்.. தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்! அரசியல் எதிர்காலமே இதுதான்?

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை சுட்டிக்காட்டி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பன்னீர்செல்வம் …

Read More »

மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை :செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம்!!

சென்னை : தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக இயற்றி, ஆளுநர் அவர்களுக்கு அனுப்பிய 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இன்று 16.11.2023 அந்த மசோதாக்களை தலைமைச் செயலகத்திற்கு …

Read More »

வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜன., பிப்.-ல் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து..!!

சென்னை: வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜனவரி, பிப்ரவரியில் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஆக்ரா கோட்டத்தில் மதுரா ரயில் நிலையம், மதுரா – பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில்பாதை, சிக்னல் பணிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Read More »

கனமழையினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கைகளை, போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கனமழையினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை, போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் நெற்பயிர் மழையில் முழ்கியதால் பெரும் சோகத்தில் உள்ளனர். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்லா …

Read More »

சென்னையில் துணிக்கடையில் சிறுவர்களை பணியமர்த்திய உரிமையாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னையில் துணிக்கடையில் சிறுவர்களை பணியமர்த்திய உரிமையாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை கேஜிஎப் துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமான விக்னேஷ், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களை துணிக்கடையில் வேலைக்கு வைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

“செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை… ஜனநாயகத்துக்கு முரணானது” – தினகரன்

சென்னை: ‘செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் …

Read More »

வாகனங்களை உடைத்து அட்டகாசம் செய்த இளைஞர்கள்; போலீஸுக்கு பயந்து ஓடியதால் எலும்பு முறிவு

சென்னை : சென்னை கொடுங்கையூர் பகுதியில் நேற்று முன்தினம் (14-11-23) இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 ஆட்டோக்கள், இரண்டு கார் என 25 வாகனங்களை அந்தப் பகுதியில் உள்ள சில மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். நேற்று அதிகாலை அங்கு வந்த பொதுமக்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது குறித்து புளியந்தோப்பு சரக துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், வாகனங்களை அடித்து உடைத்த …

Read More »