சென்னை: சென்னையில் துணிக்கடையில் சிறுவர்களை பணியமர்த்திய உரிமையாளர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை கேஜிஎப் துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமான விக்னேஷ், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களை துணிக்கடையில் வேலைக்கு வைத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.