சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, சென்னைக்கு தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலையொட்டி நேற்று முன்தினம் முதல் சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் சென்னைக்கு வரும்பயணத்தை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி …
Read More »மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்: மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்
சென்னை: மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளன. இதையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும். …
Read More »வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ஓபிஎஸ் கோரிக்கை
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சிலநாட்களாக பெய்துவரும் கனமழைகாரணமாக சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. இதையொட்டி சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட முதல்வர் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வந்தன. ஆனால் யாரும் களத்துக்கு சென்று பார்த்தாக தெரியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லாம் நன்றாக இருப்பதாகவே பேட்டியளித்து வருகிறார். ஆனால் களநிலவரம் …
Read More »அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்த அதிகாரிகளை பதவி நீக்கம் கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கைசென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கொடைக்கானல் தாலுகா பூலாத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கொடைக்கானல் தாலுகா பூலாத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை குன்னூர் தேயிலை வாரியத்தின் முன்னாள் செயல் இயக்குநரும், தற்போதைய தமிழ்நாடு மின் நிதிமற்றும் உள்கட்டமைப்பு …
Read More »சென்னை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், பாதிப்புகளை தடுப்பதோ, குறைப்பதோசாத்தியமல்ல. பல இடங்களில்மரங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்து …
Read More »சென்னையில் கனமழை காரணமாக வந்தே பாரத் உட்பட 86 ரயில்கள் ரத்து: ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்த பயணிகள்
சென்னை: சென்னையில் முக்கிய வழித்தடங்களில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் உட்பட86 விரைவு ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். மேலும், அவர்கள்மாற்று ரயில்களுக்காக காத்திருந்ததால், இந்த ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கனமழையால் சென்னை பேசின்பாலம் …
Read More »ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் அறிக்கை
சென்னை:ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டஅறிக்கை: ஜெயலலிதாவின் 7ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட கழகத்தின் சாா்பில் வரும் 5-ஆம் தேதி காலை …
Read More »4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு | வங்கிகள், அரசு அலுவலகங்கள், டாஸ்மாக் இன்று செயல்படாது; பால் விநியோகம், மருந்தகம், உணவகம் இயங்கும்
சென்னை: புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை மற்றும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்த 4 மாவட்டங்களுக்கும் செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4-ம் தேதி (இன்று) பொது விடுமுறை விடப்படுகிறது. இதனால், …
Read More »மிக்ஜாம் புயல் | கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக, வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி புதன்கிழமைக்கும், புதன்கிழமை டிச.6-ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமைக்கும் (டிச.7) மாற்றியைமைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்க எண் 34/2022-ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் …
Read More »சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிகாரிகள் ஆய்வு
சென்னை: சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னையில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஆய்வு செய்து வருகிறார். அமைச்சரின் ஆய்வின் போது தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளனர். மழை தொடர்பான புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் KKSSRR தெரிவித்துள்ளார்.
Read More »