சென்னை: மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார்.
புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளன. இதையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும். அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய. மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலைமையை மத்திய அரசும், மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.