சென்னை: 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஒன்பது கூட்டுறவு மற்றும் ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு சம்பள நிலுவைத் தொகை , இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு ரூ.63.61 கோடி வழிவகை முன்பணக் கடன் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் …
Read More »‘டாக்ஸி ட்ரைவர் கூட காசு வாங்கல!’ இந்தியர்களின் அன்பில் நெகிழும் ஆஃப்கானிஸ்தான் கேப்டன்!
நடப்பு உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசிப் போட்டியில் ஆஃப்கன் அணி இன்று களமிறங்கவிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் உத்வேகமிக்க ஆட்டத்தை கண்டு ஆச்சர்யமடைந்து பல தரப்பினரும் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் அன்பு குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.Shahidi வான்கடே மைதானத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ‘உலகக்கோப்பையில் நாங்கள் ஆடும் விதத்தைப் …
Read More »நாட்டிற்கே முன்மாதிரியான மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சாதனையை செய்து காட்டி வெற்றி பெற்றுள்ளோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேருக்கு 2வது கட்டமாக உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது. இவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சலும் தொண்டை வலியும் இருந்தது. காய்ச்சல் குணமாகி இருந்தாலும் தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. …
Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பான வழக்கில் சட்டமன்ற சபாநாயகர், செயலாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பான வழக்கில் சட்டமன்ற சபாநாயகர், செயலாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Read More »சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும் போது வெடித்து சிதறிய கேஸ் பைப்லைன்.. ஒருவர் உயிரிழப்பு..!!
சென்னை: சென்னை துறைமுக வளாகத்தில் கப்பலில் பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சென்னை துறைமுக வளாகத்தில் ஆயில் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று ஒடிசா மாநிலத்தில் இருந்து கடந்த 31ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது. ராயல் டெக் என்ற நிறுவனம் மூலம் அந்த கப்பலை பழுது பார்க்கும் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. கப்பலின் உள்ள எஞ்சின் பகுதியை பழுது பார்த்து …
Read More »பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
சென்னை: தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு …
Read More »காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், …
Read More »தமிழக அரசிடம் பெற்ற ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க விஞ்ஞானி வீரமுத்துவேல் விருப்பம்
சென்னை: தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை தமிழகத்தில் தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க சந்திரயான் -3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை செயலர் சந்தியா வேணுகோபால் சர்மா, தமிழக உயர்கல்வித் துறைசெயலர் ஏ.கார்த்திக்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்விபயின்று, இந்திய விண்வெளித் துறையின்கீழ் இயங்கும் இஸ்ரோவில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்களை …
Read More »தமிழகத்தில் 2026 தேர்தலில் கொக்குபோல காத்திருந்து பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி
சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலில் கொக்கு போல காத்திருந்து தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்திருக்கிறது. இன்னும் 131 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, ஜனவரி இறுதி வாரத்துக்குள் யாத்திரையை முடித்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக திட்டமிட்டு …
Read More »ஐடி, அமலாக்கத் துறை ‘மத்திய அரசு ஏஜென்சி’ என்றால் தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சி? – ஐகோர்ட் கேள்வி
சென்னை: “வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்?” என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கோரி …
Read More »