நடப்பு உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசிப் போட்டியில் ஆஃப்கன் அணி இன்று களமிறங்கவிருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் உத்வேகமிக்க ஆட்டத்தை கண்டு ஆச்சர்யமடைந்து பல தரப்பினரும் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் அன்பு குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.Shahidi
வான்கடே மைதானத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ‘உலகக்கோப்பையில் நாங்கள் ஆடும் விதத்தைப் பார்த்து எங்கள் நாட்டு மக்கள் பெருமிதமாக உணர்கின்றனர். எங்களின் வெற்றிகளும் சாதனைகளும் அவர்களை ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்திய ரசிகர்களை பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களும் எங்களுக்கு பலத்த வரவேற்பை அளித்திருக்கின்றனர். நாங்கள் ஆடும் ஒவ்வொரு போட்டிக்கும் திரளாக திரண்டு வந்து மைதானத்தை நிரப்பி உற்சாகமளிக்கின்றனர். இதெல்லாம் எங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. களத்தில் மட்டுமல்ல களத்திற்கு வெளியேயும் ரசிகர்கள் எங்களை நெகிழ வைத்தனர்
எங்காவது வெளியே எங்களை ஆஃப்கன் வீரர்கள் என கண்டுகொண்டால் எல்லையற்ற அன்பைப் பொழியத் தொடங்கிவிடுகின்றனர். நான் ஒரு டாக்ஸியை பிடித்து சில இடங்களுக்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டு கொண்டவுடன் அந்த டாக்ஸி ட்ரைவர் என்னிடம் காசே வாங்கவில்லை. இப்படித்தான் இப்ந்தியர்கள் எங்கள் மீது பிரியத்தை கொட்டுகினர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நாங்கள் இந்திய ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.’ என்றார்.Afghanistan
ஹஸ்மத்துல்லா ஷாகிதி சொல்வதைப் போன்று அவர்கள் ஆடும் அத்தனை போட்டிகளுக்கும் இந்திய ரசிகர்கள் பெருவாரியாக வந்து ஆதரவ தெரிவித்திருந்தனர். சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்திய போட்டிக்கு கிட்டத்தட்ட 25000 ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.