Breaking News
Home / செய்திகள் / சென்னை மெட்ரோவுக்கே சவாலான வில்லிவாக்கம் சுரங்க ரயில் நிலையம்.. நடக்க போகும் பெரிய மாற்றம்

சென்னை மெட்ரோவுக்கே சவாலான வில்லிவாக்கம் சுரங்க ரயில் நிலையம்.. நடக்க போகும் பெரிய மாற்றம்

சென்னை மெட்ரோவுக்கே சவாலான வில்லிவாக்கம் சுரங்க ரயில் நிலையம்.. நடக்க போகும் பெரிய மாற்றம்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் பேருந்து நிலையம் பகுதியில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளதால், அங்கு இயங்கி வரும் பேருந்து நிலையம் தற்காலிகமாக ஐசிஎப்பில் உள்ள ஒரு திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது..

சென்னை மெட்ரோவிற்கு இந்த ரயில் நிலையம் மிகவும் சவாலானதாக இருக்கலாம் என்கிறார்கள்.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் துரத்திற்கு உள்ளது. கோயம்பேடு திருமங்கலம் வழியாக ஒரு வழியும், பரங்கிமலை, சைதாப்பேட்டை வழியாக மறுவழித்தடமும் உள்ளது.. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதுள்ளது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2வரை 45.4 கிமீ நீளத்திற்கு 3வது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைகிறது.

அடுத்ததாக 4வது வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் – பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

அடுத்ததாக வழித்தடம் 5, மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஐந்து ரயில்கள் பூமிக்கு அடியில் அமைகிறது. அதில் ஒரு ரயில் நிலையம் தான் வில்லிவாக்கம் ரயில் நிலையம்.

இந்த ஐந்தாவது வழித்தடத்தில் மாதவரம் மில்க் காலனி , வேணுகோபால் நகர், அசிசி நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், எம்எம்பிடி, சாஸ்திரி நகர், ரெட்டேரி சந்திப்பு, கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி, திருமங்கலம், கேந்திரிய வித்யாலயா, தானிய சந்தை, சாய் நகர் பேருந்து நிறுத்தம், இளங்கோ நகர் பேருந்து நிறுத்தம், ஆழ்வார் திரு நகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர் சந்திப்பு, முகலிவாக்கம், DLF IT SEZ, சத்யா நகர், CTC, பட் சாலை, ஆலந்தூர் , செயின்ட் தாமஸ் மவுண்ட் , ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட் ரோடு, காமராஜ் கார்டன் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, குளோபல் மருத்துவமனை, எல்காட், சோழிங்கநல்லூர் வழியாக வருகிறது.

இதில் வில்லிவாக்கத்தை பொறுத்தவரை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கே சவலானதாக இருக்கும் என்கிறார்கள். இதன் காரணமாக வில்லிவாக்கத்தில் உள்ள மாநகர பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் சுரங்க ரயில் நிலையத்தை உருவாக்கும் பணிக்காக அந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக ஐசிஎப் இல் உள்ள திறந்த வெளி மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்கிறார்கள் .

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், ஐசிஎப்பில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அந்த இடத்திற்கு ஆண்டு வாடகையாக ரயில்வேக்கு 35 லட்சம் வழஙகப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புக்கொண்ட பிறகு நாங்கள் அந்த இடத்திற்கு பேருந்து நிலையத்தை மாறுவோம். அதற்கு தொடங்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்கள் ஆகும். புதிய இடத்தில் பேருந்து நிலையத்திற்கான தற்காலிக கொட்டகைகள் அமைப்போம். 22, 27 மற்றும் 47 வழித்தடங்களில் அடையாறு, பட்டினம்பாக்கம், அண்ணா சதுக்கம் செல்லும் பேருந்துகள் அங்கிருந்து புறப்பட உள்ளன என்றார்.

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் அமைய உள்ள சுரங்க மெட்ரோ நிலையம், 15மீ ஆழத்தில் விரிவாக்கப்பட்ட பாதையுடன் அமைக்கப்படுகிறது.. கொளத்தூர் சந்திப்பு மெட்ரோவிலிருந்து வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை மெட்ரோ வரையிலான 5 கிமீ தூரம் பூமிக்கு அடியில் பாதை செல்கிறது.

இதில் கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை மெட்ரோ ஆகிய இடங்களில் இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்த பாதை எப்படி என்றால், சென்னை அண்ணாசாலைக்கு கீழே பாறை மண்ணில் எப்படி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதோ, அதுபோல் அமைகிறது..

தற்போதும் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோவிற்கு அதிக இடம் தேவைப்பட்டால், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச அசௌகரியம் ஏற்படும் வகையில் சில சேவைகள் மாற்றியமைக்கப்படும் என்று எம்டிசி நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் தெரிவித்தார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *