சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, மார்ச் மாதம் முதல் வாரத்தில் துணை ராணுவம் தமிழகம் வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.இது குறித்து சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் தலைமை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
விஜயதரணி ராஜினாமா செய்தது குறித்து எந்த ஆவணமும் வரவில்லை. லோக்சபா தேர்தலை ஒட்டி மார்ச் முதல் வாரத்தில் துணை ராணுவம் தமிழகம் வருகிறது. அடுத்த வாரம் 200 கம்பெனி துணை ராணுவப்படையினர் 2 கட்டங்களாக தமிழகம் வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.