Breaking News
Home / செய்திகள் / INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!’ மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா

INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!’ மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா

INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!' மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா

ராஞ்சியில் நடந்து வந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

 Rohit Sharma

நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 40 ரன்களை எடுத்து விக்கெட் எதையும் இழக்காமல் இருந்தது. ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நாளின் தொடக்கத்தில் முதல் செஷனிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித், ஜெய்ஸ்வால், ரஜத் பட்டிதார் என மூவருமே அவுட் ஆகினர். எப்படி இந்தியா சார்பில் இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸில் ஸ்பின்னர்களே அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்களோ அதேபோல, இப்போது இங்கிலாந்து சார்பிலும் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

பஷீர், ரூட், ஹார்ட்லி என அத்தனை பேரும் சிறப்பாக வீசினர். உணவு இடைவேளை முடிந்ததும் உடனேயே அடுத்தும் இரண்டு விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தது. ஜடேஜா, சர்பராஸ் என இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக டைட்டாக வீசிக்கொண்டிருந்தனர். ஒரு பக்கம் சுப்மன் கில் நங்கூரம் போல நிலைத்து நிற்க, அவருடன் துருவ் ஜூரேல் சேர்ந்து கொண்டார். முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த இன்னிங்ஸிலும் சிக்கலான சூழலில் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடினார். சுப்மன் முழுமையாக தற்காப்பு வட்டத்திற்குள் செல்ல, துருவ் ஜூரேல் மட்டும்தான் கொஞ்சம் ரன் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தினார். கூட்டணியாக இருவருமே நல்ல புரிதலுடன் ஆடியிருந்தனர். 30 ஓவர்களாக பவுண்டரியே இல்லாமல் தற்காப்பாக மட்டுமே ஆடிவந்த நிலையில் அதை உடைத்து துருவ் ஜூரேல்தான் முதல் பவுண்டரியை அடித்து அசத்தினார். துருவ் ஜூரேல்

ஜூரேலின் ஆட்டத்தால் இந்தியாவின் மீதிருந்த அழுத்தம் குறைந்தது. பென் ஸ்டோக்ஸ் பீல்ட் ப்ளேஸ்மென்ட் மூலம் காட்டிய வித்தைகளும் தளர்ந்தது. பொறுமையாக ஆட வேண்டும் அதேநேரத்தில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஆட்டத்தை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இருவரின் எண்ணமாகவும் இருந்தது. அதற்கேற்ப திட்டமிட்டே இருவரும் ஆடினர். இனிமேல் பிரச்சனையில்லை எப்படியானாலும் சமாளித்துக் கொள்ளலாம் எனும் நிலை வரும் வரை இருவரும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டே ஆடினார். தேவைப்பட்ட ரன்கள் 20 க்கும் கீழாக குறைந்த சமயத்தில்தான் சுப்மன் கில் பேட்டை சுழற்றினார். பஷீரின் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். அரைசதத்தை கடந்தார். அத்தோடு ஆட்டமும் இந்தியாவின் கைக்குள் வந்தது. வின்னிங் ரன்னை ஜூரேல் அடிக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. இத்தோடு 3-1 என்ற கணக்கில் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. ஆட்டநாயகன் விருதை துருவ் ஜூரேல் பெற்றார்.

அஷ்வின், குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சு துருவ் ஜூரேலின் பொறுப்பான பேட்டிங் என இந்த போட்டியில் இந்தியாவிற்கு சாதகமான அம்சங்கள் நிறையவே இருந்தது. ‘இப்படி ஒரு பிட்ச்சை பார்த்ததே இல்லை. களத்தில் இறங்கி ஆடினால்தான் என்னவென்றே புலப்படும்.’ என ஸ்டோக்ஸ் போட்டிக்கு முன்பாக கூறியிருந்தார்.

போட்டிக்கு முன்பு அவருக்கு இருந்த குழப்பம் போட்டியின் போதும் தீரவே இல்லை. தோல்விகளைக் கடந்து தாங்கள் சரியென நம்பும் அணுகுமுறை ஒன்று முழுமையாக பொய்த்து போயிருப்பதுதான் இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அடி.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *