சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 8 வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். அந்த மும்பை நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.
எந்த காரணத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சோதனை முழுமையாக நடந்து முடிந்த பிறகு ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.