Breaking News
Home / சமுதாயம் / வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையின் முக்கிய பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையின் முக்கிய பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

Three-day traffic restrictions in parts of central Chennai from Oct 17 -  check routes to avoid | Chennai News, Times Now

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில் நாளை (18.02.2024) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

OMR நோக்கி செல்லும் வாகனங்கள் :

MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, 21 ஆவது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அதேபோல் கலாக்ஷேத்ராவிலிருந்து OMR நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். KBN-லிருந்து OMR நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.

LB ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் :

OMR-லிருந்து 2 ஆவது அவென்யூ வழியாக LB சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக அவ்வாகனங்கள் 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மேலும் கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

KBN நோக்கி செல்லும் வாகனங்கள் :

OMR மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து KBN சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *