சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய அமர்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024’-ஐ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன.07) தொடங்கி வைத்தார். இதில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இம்மாநாட்டில், மத்திய வர்த்தகம் …
Read More »சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
சென்னை: சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான வல்லுநர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஆகியோர் உரையாடினர். அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்து சோம்நாத் கூறியதாவது: சந்திராயன் 3 என்பது மக்களின் மனங்களுடன் தொடர்புடையது. …
Read More »குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியின் கண்காணிப்பு ட்ரோனுக்கு காப்புரிமை: யுஏவி ஆராய்ச்சி மைய குழுவுக்கு மத்திய அரசு வழங்கியது
சென்னை: அண்ணா பல்கலைக்கழக எம்ஐடிகல்லூரியின் கோபுர கண்காணிப்பு ட்ரோனுக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித் துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி)குரோம்பேட்டையில் அமைந்துள் ளது. இங்குதான் அரசின் வான்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும்டாக்டர் கலாம் யுஏவி ஆராய்ச்சிமையம் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக வேளாண்மை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பல்வேறு விதமான ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த பணிகளில் பேராசிரியர் செந்தில் குமார் தலைமையிலான …
Read More »அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டம்..!!
சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசானது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜன.7, 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. 2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் …
Read More »புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தென்னை நார் சார்ந்த தொழில் வளர்ச்சிக்காக புதிய கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை: தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், `தென்னை நார் கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்த்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் …
Read More »எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …
Read More »டெஸ்லா போட்டியாளர்.. சென்னைக்கு வர இருந்த வின்பாஸ்ட்.. தென் தமிழ்நாட்டிற்கு அனுப்பிய தமிழ்நாடு அரசு!
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். இப்போது இ …
Read More »தூள் கிளப்பும் சாம்சங்.. 200MP கேமரா.. 45W சார்ஜிங்.. பிரம்மாண்டமான கேலக்ஸி போன் ரெடி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஜனவரி 17-ம் தேதி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் நிகழ்வில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த வெளியீட்டு நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். குறிப்பாக நிகழ்வில் சாம்சங் …
Read More »Realme இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme கடந்த மாதம் Realme C67 5G ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் விரைவில் நாட்டில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது Realme 12 சீரிஸ் அல்லது Realme GT 5 Pro ஆக இருக்கலாம். நாட்டில் உள்ள நிறுவனத்தின் பிரிவு புத்தாண்டு அன்று சோசியல் மீடியா தளமான X இல் ஒரு …
Read More »வானியல் ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58
சென்னை: இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரிய தகவல்களை வழங்கி …
Read More »