Breaking News
Home / தகவல்கள் (page 8)

தகவல்கள்

வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்றோருக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: “2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் …

Read More »

மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வாட்ஸ் – அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டு: புதிய வசதியை மேலாண் இயக்குநர் அறிமுகம் செய்தார்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்-அப் மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கானபுதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் பயணச் சீட்டுவாங்கும் பயணிகள், மின்னணுபயணச் சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, கவுன்ட்டர்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக், …

Read More »

சென்னை சாலைகளை புதுப்பிக்க ரூ.810 கோடியில் டெண்டர்: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் புதிய திட்டங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: …

Read More »

“நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் …

Read More »

தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்போம் – திமுக குழு தலைவர் கனிமொழி எம்.பி. தகவல்

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவரான அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் கேஆர்என் ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் …

Read More »

குடியரசு தினம், தைப்பூசம் தொடர்விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு செல்ல 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

சென்னை: தொடர்விடுமுறையை ஒட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வியாழக்கிழமை …

Read More »

இறுதி பட்டியலின்படி தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்கள்: கடந்த ஆண்டைவிட 7.61 லட்சம் பேர் அதிகம்

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட 7.61 லட்சம் பேர் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு கூறியதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில், 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக …

Read More »

ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசுதனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக …

Read More »

பூலித்தேவன் நினைவு தபால் தலை | மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் பூலித்தேவன் நினைவு தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த நேதாஜி இளைஞர் சங்க தலைவர் முத்து தாக்கல் செய்த மனுவில், “18-ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள …

Read More »

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் இடைநீக்க விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதமான இறுதி முடிவும் எடுக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் …

Read More »