சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. …
Read More »கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டப்பேரவையில் பதிலளித்தனர். இந்நிலையில் போக்குவரத்து …
Read More »பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி முதலீட்டு மோசடி: இணைய வழி குற்றப்பிரிவு எச்சரிக்கை
சென்னை: மோசடி செய்பவர்கள், பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் நபர்களை குறிவைக்கின்றனர். மோசடி செய்பவர்கள் மோசடி வணிகத் திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் அல்லது பொருட்கள் வர்த்தகத் திட்டங்கள் போன்ற போலி முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். அவர்கள் அதி நவீன விளம்பரப்படுத்தும் யுக்திகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அவர்கள் தங்கள் முழு முதலீட்டையும் …
Read More »கிராமப்புறங்களில் அரசு சார்பில் கடந்த 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் சீரமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: …
Read More »ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுதுபார்க்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Read More »தமிழகத்தில் ரூ.19,100 கோடி மதிப்பில் புதிதாக 13 குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை: தமிழகத்தில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்: ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் கிள்ளியூர் தொகுதி வழியாக கன்னியாகுமரிக்கு செல்கிறது. இந்தக் குழாய் பழுதடைந்து உடைந்துள்ளதால், விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு: …
Read More »தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் உருமாற்றம் : மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தல்!!
சென்னை : தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓர் ஆண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்று பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். …
Read More »“சாதனைப் பயணம்; ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்பெயினில் இருந்து இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது பயணத்தைப் பற்றி விவரித்தார். இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “ உங்கள் வாழ்த்துகளை …
Read More »2400 கோடி ரூபாய். 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, யானை கவுனி பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருந்தன. இந்த குடியிருப்புகளை இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 1970ஆம் ஆண்டு தமிழக் அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. …
Read More »இன்று ஸ்ட்ரைக்.. ஸ்டெர்லைட்போல் பெரிதாகும் எண்ணூர் ரசாயன ஆலை எதிர்ப்பு! ஆக்சனில் 33 கிராமங்கள்
சென்னை: எண்ணூரில் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி இன்று 33 கிராமங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்து உள்ளது கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் ரசாயன தொழிற்சாலை. வேளாண்மைக்குத் தேவையான ரசாயண உரத்தை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவன ஆலையில் இருந்து கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. …
Read More »