Breaking News
Home / செய்திகள் (page 6)

செய்திகள்

24 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். …

Read More »

இலவச பஸ் பயணம் முதல் கள ஆய்வில் முதல்வர் வரை! நீங்கள் நலமா திட்டத்தில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பட்டியலாக அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன்! அதன் மற்றுமோர் அடையாளம்தான் நீங்கள் நலமா திட்டம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் பார்த்து பார்த்து எத்தனையே முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். …

Read More »

ஒரே காரணத்தை தான் சொல்றீங்க.. குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பல இடங்களில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் …

Read More »

வெள்ளம் வந்தபோது உதவியவர்கள் மட்டும் பேசலாம்.. பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

சென்னை: நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சென்னை நந்தனத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், திமுக அரசை மிகவும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, சென்னை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது திமுக அரசு செயல்படவே இல்லை என்றும், மக்களின் துயரங்களைப் புரிந்துகொண்டிருப்பது மத்திய அரசு தான் என்றும் கூறினார். பிரதமர் மோடி பேசுகையில், “அண்மையில் சென்னை புயலால் பாதிக்கப்பட்டது. சென்னையில் வெள்ள நீர் மேலாண்மையை திமுக …

Read More »

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கு – இன்று தீர்ப்பு வங்குகிறது உயர்நீதிமன்றம்!

சென்னை : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி “சனாதன ஒழிப்பு மாநாடு” என்ற  மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அத்துடன் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் என்று …

Read More »

நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

சென்னை: நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது: நபார்டு வங்கி வெளியிட்டுள்ள வளம் சார்ந்த …

Read More »

பெரும் பொறுப்பை தோள்களில் சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: மு.க. ஸ்டாலின்

சென்னை: இந்தியாவின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக முதல்முதலாக ஆட்சி அமைத்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: “மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை …

Read More »

புலிகள் ஆதரவு இயக்கங்களுடன் பயணிக்கிறதா காங்.? – விளக்குகிறார் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்த போது தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கசப்பு இருக்கிறதா? – திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே கசப்பு ஒன்றும் இல்லை. இனிப்பாக, மகிழ்ச்சியாக இருக் கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு போதும் தொகுதிகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது. அவர்களும் எங்களை விட மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களை …

Read More »

தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாநிலை இன்று ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை எழும்பூர் ராஜரத்தினம் …

Read More »

அய்யா வைகுண்டர், கால்டுவேல் குறித்த சர்ச்சைப் பேச்சு… ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கடும் கண்டனம்!

சென்னை: சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்ட சுவாமி குறித்துப் பேசுகையில், “சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்” …

Read More »