Breaking News
Home / செய்திகள் (page 50)

செய்திகள்

பாமக சாயப் போகும் கூட்டணி எது? – அன்புமணி அரசியலும் அறிகுறிகளும்

தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.க, ஆளும் தி.மு.க-வை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை விட வேறு யாரும் இந்தளவுக்கு விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். அதேநேரத்தில், அவ்விரண்டு கட்சிகளுடன் கூட்டணியும் அமைத்து பலனும் அடைந்து இருக்கிறது பா.ம.க.அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க, 5 இடங்களில் வெற்றிப் பெற்றது. இதையடுத்து நடந்த ஊரக, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் …

Read More »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை மார்க்கங்களில் இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சிறப்பு ரயில்கள் அறிவித்த அடுத்த …

Read More »

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக மனு தாக்கல்

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆவணங்களை அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாகவும் கைது நோக்கத்தில் விதிகளை மீறி போலியாக ஆவணங்களை அமாலக்கதுறை தயாரித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறை ஜனவரி …

Read More »

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைகளை விரிவுபடுத்த பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பெரம்பலூரில் ரூ.2,500 கோடியில் குரூக்ஸ் காலணி தொழிற்சாலையை பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தொடங்கி உள்ளது. 2022 நவம்பரில் காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த நவம்பரில் ஆலையை திறந்து வைத்தார். பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் 2-வது கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய …

Read More »

ஆளுநர் ரவி உள்ளே கால் எடுத்து வைத்தால்.. மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!

சென்னை: ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 …

Read More »

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா: புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கு இடையிலான பனிப்போரில் முதல்வர் தலையிடும் அளவுக்கு சென்றதால் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மற்ற கட்சிகளைக் காட்டிலும் திமுகவில் உள்ள வழக்கறிஞர் அணி மிகவும் வலுவானது என்பதால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் …

Read More »

சொத்து தகராறு உட்பட சிவில் பிரச்சினைகளில் போலீஸார் தலையிட்டால் கடும் நடவடிக்கை: சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி எச்சரிக்கை

சென்னை: நிலம், பணம், சொத்து தகராறு உட்பட சிவில் பிரச்சினைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பணம், நிலம், சொத்து, பாதை, அறிவுசார் சொத்து தகராறு உள்ளிட்ட சிவில் பிரச்சினை தொடர்புடைய மனுக்கள் மீது …

Read More »

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு 10 லட்சம் பேர் பயன்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை, தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 2024-25-ம் ஆண்டுக்கான காப்பீட்டுதொகை ரூ.1,228.27 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் …

Read More »

மக்களுக்கும் சேர்த்துதான் கோரிக்கைகளை முன்வைத்தோம்; தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தம்: சிஐடியு தொழிற்சங்கம்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளடக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்களும் நேற்று முன்தினம் முதல் …

Read More »

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு: காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிருப்தி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக கல்வித்துறைகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள் (பிஇஓ) உட்பட பணிகளில் ஏற்படும் காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதனுடன் ஆசிரியர் தகுதித் …

Read More »