Breaking News
Home / செய்திகள் (page 40)

செய்திகள்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மற்றும் மெச்சத் தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்தவகையில் குடியரசுத் …

Read More »

“பாஜக தற்காத்துக் கொள்ள மதத்தை கையில் எடுக்கிறது” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: “பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பாஜகவின் தோல்விகளை, அவர்களின் தமிழ்மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம். இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இண்டியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்” என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ …

Read More »

பிரபல பாடகி பவதாரிணி மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 47. இசையமைப்பாளர் இளையராஜவின் மகளான இவர், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை …

Read More »

75-வது குடியரசு தினம் | சென்னையில் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. முன்னதாக, 7.50 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடனும், …

Read More »

வல்லுநர்கள் தெரிவித்த கருத்தை பிரச்சாரம் செய்தால் காங்கிரஸுக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும்: ப.சிதம்பரம் தகவல்

சென்னை: தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் 100 இடங்களில் பேசினால் காங்கிரஸூக்கு 1 கோடி வாக்குகள் கிடைத்துவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் …

Read More »

கிளாம்பாக்கத்தை தாண்டி நகருக்குள் வராத ஆம்னி பேருந்துகள்; ஓட்டுநர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்: ஆயிரக்கணக்கில் செலவு என குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நேற்று காலை முதல் கிளாம்பாக்கத்தைத் தாண்டி பெரும்பாலான பேருந்துகள் பயணிகளுடன் நகருக்குள் வரவில்லை. இதனால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்டலூரை அடுத்து புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் புறப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் முதலே கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஏாாளமான …

Read More »

அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலுக்காக பல்வேறு பணி குழுக்களையும் அமைத்து வருகின்றன. அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணி குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். …

Read More »

26 ஆயிரம் பத்திரப் பதிவு: ஒரே நாளில் சாதனை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் 26 ஆயிரம் பத்திரங்கள் பதியப்பட்டு, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார். பொதுவாக ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, ஜன.31-ம் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தவகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, …

Read More »

IND vs ENG முதல் டெஸ்ட் | மீண்டும் ஜொலித்த இந்திய சுழல் பந்துவீச்சு – இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் …

Read More »

பழநி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்

சென்னை: பழநி, திருச்செந்தூர் கோயில் உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச விழா இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். வடலூரிலும் லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்பட்டது. …

Read More »