சென்னை: சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் ரூ.418.20 கோடியிலான பாதாள சாக்கடை திட்டம், நீலாங்கரையில்ரூ.77.03 கோடியிலான குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.418.20 கோடியிலும், நீலாங்கரையில் குடிநீர் வழங்கல் திட்டம் ரூ.77.03 கோடியிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா நீலாங்கரையில் …
Read More »ஜிஎஸ்டி ஆல் 85 ஆயிரம் கோடி இழப்பு! Speaking for india’ இல் ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: திமுகவின் மிகப் பெரிய பலம், அது காலத்திற்கு ஏற்ற மாதிரி புதிது புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் எல்லாம் தன்னை இணைத்துக்கொள்வது. ஒரு காலத்தில் திமுகவின் கொள்கைகளைப் பேச 80 பத்திரிகைகள் இருந்தன. அச்சில் வந்த பத்திரிகைகளின் பத்திரிகைகளின் பட்டியல் இவை. அச்சில் வராத கையெழுத்து பத்திரிகைகள் பல. ஏன்? முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியே அவரது ‘முரசொலி’யை முதலில் கையெழுத்து பத்திரிகையாகவே தொடங்கினார். அதன் இன்னொரு வடிவமான டிஜிட்டல் …
Read More »6000 அப்பார்ட்மென்ட்.. ரூ.950 கோடியில் ரெடியாகும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழகத்தில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 10 வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பை திமுக ஏற்றதுமே, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் பெருத்த கவனத்தை செலுத்தி வருகிறது.. முக்கியமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், இடியும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டிருந்தார். புதிய வீடுகள்: …
Read More »உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் மற்ற 2 அணிகள் எவை?
உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ளன. இவற்றை தவிர்த்து அரையிறுதியில் விளையாடும் மற்ற 2 அணிகள் எவை என்பது குறித்த அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியா மோத வேண்டும். இவற்றில் ஒன்றில் வெற்றி …
Read More »கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். …
Read More »மறுகட்டுமான திட்டத்தில் 21 இடங்களில் ரூ.1330 கோடியில் 7,724 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை: மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 21 திட்டப் பகுதிகளில் ரூ.1,330.43 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது: வாரியத்தின் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 30 …
Read More »இரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் மனு
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இரண்டு நாள் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் புதிதாக மனு அளித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அன்று முதல் …
Read More »இலவச மின்சாரம், மானியங்களை காவு கொடுக்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம்: மார்க்சிஸ்ட் சாடல்
சென்னை: “இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி அதேசமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் …
Read More »சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடியவர் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது: உயர் நீதிமன்றம்
சென்னை: சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய நபர் விரும்பத்தகாத வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. …
Read More »தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.13-ம் தேதி விடுமுறை விடப்படுவதாகவும், அதனை ஈடுகட்ட நவ.18-ம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் நவ.12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் புத்தாடை, பட்டாசு என களை கட்டும். இந்நிலையில், தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் …
Read More »