சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவங்களின் பின்னணியிலும் குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் சிலர் இருப்பதாக தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. தற்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் …
Read More »புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது தொடர்பான கோரிக்கை முதல்வர் வாயிலாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம், ஆசிய புலம்பெயர்வோர் மற்றும் புலம் பெயரும் பெண்கள் அமைப்பு ஆகியன சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள விடுதியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாடு …
Read More »அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புது நடைமுறை: நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் பிரிக்கப்படாத பாகம், கட்டிடம் என இரண்டையும் சேர்த்து பதிவு செய்யும் புதிய நடைமுறை தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது. தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை …
Read More »டிச.1-ம் தேதி முதல் மாதாந்திர அட்டையில் ஆவின் `டிலைட் பால்’ விநியோகம்
சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட்டை விநியோகிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. கடும் எதிர்ப்பு காரணமாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதில்லை என்றும், அதேநேரத்தில் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஆவின் ஊதா நிற பாக்கெட் பால் (டிலைட் …
Read More »உதகையில் தொடர் மழை காரணமாக மக்கள் அவதி…
உதகை: உதகையில் மழை, பனிமூட்டமான காலநிலைகளால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை, சில நேரங்களில் மழையின்றி பனிமூட்டம் ஆகிய கால நிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதுபோன்ற மாறுபட்ட கால நிலைகளால் பொது மக்களுக்கு தலை வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது …
Read More »விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்…
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் காலமானதால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். …
Read More »ரூ.50000 வரை சம்பளம்.. 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்…பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை…
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்குள் (05/12/2023 ) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் குறித்த விவரங்கள்: பதவிசம்பளம்காலியிடங்கள் எண்ணிக்கைஇன சுழற்சிஆள்சேர்க்கை அறிவிக்கைஇரவு காவலர் பணி – தருமபுரி பிளாக் பஞ்சாயத்துரூ. 15700 – 50000/- மற்றும் இதர படிகள்1பொதுப் போட்டி (General Turn)இரவு காவலர் …
Read More »நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள …
Read More »பாஜகவில் சேர்ந்துமே மோடியை விமர்சித்த ட்வீட்டை டெலிட் செய்யவில்லை.. “சேரி” பதிவும் நீங்காது- குஷ்பு
சென்னை: நான் பிரதமர் மோடி குறித்து விமர்சித்த ட்வீட்டுகளையே இதுவரை நீக்கவில்லை. சேரி மொழி ட்வீட்டை நான் நீக்க மாட்டேன் என நடிகையும் தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் நான் சேரி மொழி என கூறியது பிரெஞ்ச் மொழி அர்த்தத்தில்தான். நான் யாரையும் தவறாக கூறவில்லை. வேளச்சேரி என இருப்பதற்கு என்ன அர்த்தம். …
Read More »6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய அணி வீரர்கள்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, …
Read More »