சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவி்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘மிக் ஜாம்’ புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்று முன்தினம் (டிச.4), நேற்று (டிச.5) …
Read More »டெல்லியில் இருந்தாலும் மனசெல்லாம் சென்னையில்! கனிமொழி வீட்டில் டன் கணக்கில் தயாராகும் உணவுகள்!
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோருக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. நேற்று காலை முதலே 3 பெரிய தேக்ஸாக்களில் வெரைட்டி ரைஸ்கள் சமைக்கப்பட்டு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகின்றன. கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்படுகிறது. நேற்றை போலவே இன்றும் கனிமொழி எம்.பி.யின் சிஐடி காலணி இல்லத்தில் பிரத்யேகமாக வெரைட்டி …
Read More »மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்திடுக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்துத் தர தமிழக அரசை ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் …
Read More »சென்னையில் 80% பஸ்கள் இயக்கம்.. இந்த பகுதிகளுக்கெல்லாம் பஸ் கிடையாது! போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், சென்னையில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் …
Read More »மிக்ஜாம் புயல் பாதிப்பு | சென்னையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சென்னை மாநகர மக்களின் வாழ்வாதார இழப்பை ஓரளவாவது போக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நேற்று (டிச.5) கரையைக் கடந்த மிக்ஜாம் புயல் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்புகளையும், …
Read More »கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!
சென்னை: கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. …
Read More »மழை எங்களை வேரோடு சாய்த்துவிட்டது.. இன்சூரன்ஸும் கிடைக்காதாம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!
சென்னை: மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது என சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை, யாரையும் விட்டுவைக்கவில்லை. தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘தேசாந்திரி’ பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். சென்னையில் கொட்டிய கனமழை காரணமாக, புத்தக குடோனுக்குள் மழை …
Read More »சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் தொடங்கியது!
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் …
Read More »“அஜித் எங்களுக்கு உதவினார்” – நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
சென்னை: ‘பொதுவான நபர் ஒருவர் மூலமாக நடிகர் அஜித் எங்களுக்கு உதவி செய்தார்’ என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆமீர்கான், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், ‘பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் …
Read More »தொடர் கனமழையால் பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க திட்டம்
சென்னை: தொடர் கனமழையால் பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வு நடப்பு கல்வியாண்டு முதல்மாநில அளவில் ஒரே வினாத்தாள்அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை கடந்தமாதம் வெளியிட்டது. அட்டவணைப்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு டிசம்பர் …
Read More »