Breaking News
Home / செய்திகள் (page 109)

செய்திகள்

விராட் கோலி 50-வது சதம் – சச்சின் சாதனை முறியடிப்பு; நியூஸி.க்கு எதிராக இந்தியா ரன் குவிப்பு | ODI WC 2023 1st Semi Final

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதம் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் 50-வது சதம் எனும் மைல் கல்லை எட்டி சச்சின் டெண்டுலர்கரின் சாதனையை முறியடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் – ஷுப்மன் கில் கூட்டணி …

Read More »

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் | சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் – முதல்வர் வாழ்த்து

சென்னை: தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகையாளர் நாள் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் போற்றப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள …

Read More »

”தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது” – அன்புமணி

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் 2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த …

Read More »

10-ம் வகுப்புக்கு மார்ச் 26, 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ல் பொதுத் தேர்வு தொடக்கம்: கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு …

Read More »

சொந்த வாழ்க்கையில் இறுதி வரை கம்யூனிஸ்ட் நெறிகளை கடைபிடித்த ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1922-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி 2-வது மகனாக பிறந்தார் என்.சங்கரய்யா. அவருக்கு முதலில் பிரதாப சந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் அவருடைய பாட்டனாரின் பெயரான சங்கரய்யா என்ற பெயர் சூட்டப்பட்டது. மதுரை நகராட்சியில் பொறியாளராக பணி கிடைத்ததை ஒட்டி, நரசிம்மலுவின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும், ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் …

Read More »

குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு; ஓய்வூதியர்களுக்கு வழங்காதது பாரபட்சமானது – உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க மறுத்த தமிழ்நாடு குடிநீர்வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் செயல் பாரபட்சமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகவும், ஓய்வூதியம் 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசும் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தமிழக அரசுஊழியர்கள் …

Read More »

உலகமே அசைஞ்சாலும்.. முதல் 10 ஓவர் காலை எடுத்துடாதீங்க.. இந்திய வீரர்களுக்கு போன மெசேஜ்! என்ன காரணம்?

சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்ற அச்சம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த …

Read More »

சென்னை அண்ணா நகரில் ரோஸ் மில்க் கடை ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. 2 பேர் கைது.. திடுக் தகவல்

சென்னை: சென்னை அண்ணா நகரில் ரோஸ் மில்க் கடை ஊழியரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெட்சான் மற்றும் தென்றல் ஆகிய இரண்டு பேர் திருமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் சரண் அடைந்துள்ளனர். ஊழியர் மீது தெரியாமல் இடித்ததற்கு, மேலாளர் திட்டியதால் பதிலுக்கு தாக்கியதாக கூறியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் கோரா புட்சீட் என்ற ரோஸ் மில்க் கடை இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு …

Read More »

“பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை நீடித்திடுக” – ஈபிஎஸ்

சென்னை : தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற …

Read More »

ரயில்வே காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்..!!

சென்னை: தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் …

Read More »