சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்ற அச்சம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்த முறை செமி பைனலுக்கு 9 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை.
இதனால் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணிக்கு ஏகப்பட்ட பிரஷர் உள்ளது. நாக் அவுட் களங்கத்தை துடைக்க வேண்டும், 2019ல் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என்று இந்தியா அணிக்கு எச்சரிக்கை அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய அணிக்கு போன எச்சரிக்கை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது. அதன்படி மாலை நேரத்தில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் முதல் 10 ஓவர்கள் எதுவும் செய்ய கூடாது. முக்கியமாக டெஸ்ட் மேட்ச் போல மெதுவாக ஆட வேண்டும்.
பிட்சை விட்டு காலை எடுத்து இறங்கி வந்ததெல்லாம் ஆடவே கூடாது. முடிந்த அளவு ஒரே இடத்தில் நின்று ராகுல் டிராவிட் டெஸ்ட் ஆடுவது போல உறுதியாக ஆட வேண்டும். பொதுவாக மும்பை வான்கடே ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம். இங்கே கடல் காற்று மாலை நேரத்தில் வீசும்.
ஏன் முக்கியம்?: இதனால் முதல் இரண்டாவது இன்னிங்சில் 10 ஓவர்கள் பந்து ஸ்விங் ஆகும். மிக மோசமாக பந்து ஸ்டம்பிற்கு வரும். இதன் காரணமாகவே இரண்டாவது இன்னிங்சில் இந்த பிட்சில் ஆடிய அணிகள் எல்லாம் இந்த உலகக் கோப்பையில் மிக கடுமையாக முதல் 10 ஓவர்கள் திணறி உள்ளன. உதாரணமாக இரண்டாவதாக இங்கே பேட்டிங் செய்த ஆண்கள் முதல் பவர் பிளேவில் எடுத்த ரன்கள் பின்வருமாறு.. 67/4, 35/3, 14/6 மற்றும் 52/4.
2 முக்கிய அணிகள் அவுட்? செமி பைனலுக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்? உலகக் கோப்பையில் செம ட்விஸ்ட்
இதில் ஆஸ்திரேலியா மட்டுமே சரிவில் இருந்து மீண்டு மேக்ஸ்வெல் ஆட்டம் காரணமாக இந்த பிட்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றது. மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம் பேட்டிங் பிடித்து இங்கே மோசமாக தோல்வி அடைந்துள்ளன. மும்பையில் இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியும் நபர்களுக்கு சொல்லப்படும் எச்சரிக்கை கிரிக்கெட் வல்லுனர்கள் மூலம் இந்திய அணிக்கும் சொல்லப்பட்டு உள்ளது.
மாலை நேரத்தில் இரண்டாவது பேட்டிங் ஆடும் பட்சத்தில் முதல் 10 ஓவர்கள் மிக மெதுவாக ஆட வேண்டும். இல்லையென்றால் விக்கெட் வேகமாக விழுந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.