சென்னை: ஒருசிலர் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான சென்னை பெருநகரகுடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் நடவடிக் கைக்கு தடை விதித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 15 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி ஒட்டுமொத்த …
Read More »காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்த ஒப்பந்தம் கோரவில்லை: சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் முதல்வரின் காலைஉணவு திட்டம் தற்போது 358 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை சிறப்பாகச் செயல்படுத்த மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆண்டுக்கு ரூ.19 கோடிசெலவில், தனியார் மூலம் திட்டத்தை செயல்படுத்த கடந்தமாதம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட …
Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், முதல்வருடன் பேசி தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் …
Read More »வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; களப்பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர்ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது: மழைக் காலத்தில் ஏற்படும் எந்தச் சூழலையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம்மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் …
Read More »சென்னையில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்ற இரவு, பகலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்: பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில்வல்லுநர்களின் பரிந்துரை யின்பேரில் மேலும் 800 கிமீநீளத்துக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டாலும், கடந்த 29-ம் தேதிகொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான இடங்களில் மழைநீர்தேங்கியது. வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்புகுந்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர். மாநகராட்சி சார்பில், தேங்கிய வெள்ள நீரை வடிக்கும் பணியில் சுழற்சி முறையில் 23 ஆயிரம்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 29-ம் தேதி இரவு …
Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் …
Read More »தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல் – முதல்வர் ஆலோசனை..!
சென்னை: வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல் – …
Read More »சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னையில் அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அயோத்திதாசப் பண்டிதரின் 175-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் நினைவாக ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் …
Read More »சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( பணி நியமன தேர்வு ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் டிச.2 மற்றும் டிச. 3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அன்றைய தினங்களில் சென்னையில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான பிரதான தேர்வு டிச.9 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எந்தெந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதோ …
Read More »₹1,406 கோடியில் மீட்டெடுத்து; 43 கி.மீ. நீள அடையாறு ஆற்றை பராமரிக்கும் திட்டத்துக்கு டெண்டர்
சென்னை: 43 கிலோ மீட்டர் நீளமுள்ள, அடையாறு ஆற்றை ரூ.1406 கோடியில் மீட்டெடுத்து பராமரிக்கும் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், பணிகளை வேகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு. இந்த ஆறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் உருவாகி 42.5 கிலோ மீட்டர் நீண்டு பட்டினப்பாக்கம் மற்றும் பெசன்ட் நகர் பகுதிக்கு இடையேயான முகத்துவாரம் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. …
Read More »