சென்னை: ஒருசிலர் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான சென்னை பெருநகரகுடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் நடவடிக் கைக்கு தடை விதித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 15 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை எதிர்த்து அந்த குடியிருப்பில் வசிக்கும் எஸ்.வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அனைவரும் பொறுப்பாக முடியாது: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘குடியிருப்பில் வசிக்கும் ஒருசிலர் உரிய கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த குடியிருப்பு களுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது. ஒருவருக்காக மற்ற குடும்பத்தினரை கஷ்டப்படுத்த முடியாது. கட்டணத்தை யார் செலுத்த வில்லையோ அவரிடமிருந்து சட்டப்படி அதற்கான நிலுவைத் தொகையை அதிகாரிகள் வசூலி்க்க வேண்டுமேயன்றி, அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிப்போம் எனக் கூறுவது தவறு. சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடி யாது. எனவே அனைத்து குடியிருப்பு களுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைத் துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும்வாரியம் எடுத்துள்ள நடவடிக் கைக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.