Breaking News
Home / செய்திகள் (page 55)

செய்திகள்

என்னை சந்திக்கும்போது பூங்கொத்துக்குப் பதில் கருத்தாழமிக்க புத்தகம் வழங்குங்கள்: அதிமுகவினருக்கு பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: என்னை சந்திக்கும்போது பூங்கொத்துக்குப் பதில் கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்கவேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும், அதனையடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக மகத்தான வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், என்னை நேரில் சந்திக்க வரும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் நான் …

Read More »

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? – அன்புமணி கேள்வி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தொடர்பான விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2 மாதங் களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டி ருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன், …

Read More »

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியின் கண்காணிப்பு ட்ரோனுக்கு காப்புரிமை: யுஏவி ஆராய்ச்சி மைய குழுவுக்கு மத்திய அரசு வழங்கியது

சென்னை: அண்ணா பல்கலைக்கழக எம்ஐடிகல்லூரியின் கோபுர கண்காணிப்பு ட்ரோனுக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித் துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி)குரோம்பேட்டையில் அமைந்துள் ளது. இங்குதான் அரசின் வான்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும்டாக்டர் கலாம் யுஏவி ஆராய்ச்சிமையம் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக வேளாண்மை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பல்வேறு விதமான ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த பணிகளில் பேராசிரியர் செந்தில் குமார் தலைமையிலான …

Read More »

விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுரை எழுதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேமலதா நன்றி

சென்னை: விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுரை எழுதியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள் ளார். இது தொடர்பாக பிரதமருக்கு பிரேமலதா அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் மனதில் குறிப்பாக தேமுதிகவினர் மனதில் டிச.28-ம் தேதி என்பது கருப்பு தினமாக பதிந்துள்ளது. அன்றைய தினமே எங்களது அன்புக்குரிய தலைவர் தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தார். இந்நிலையில் பல்வேறு நேர நெருக்கடிக்கு இடையிலும், தமிழக …

Read More »

இனி வரும் காலங்களில் அணிவகுப்பு, பேரணிகள் நடத்த முன்வைப்பு பணம் பெற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இனிவரும் காலங்களில் அணிவகுப்பு மற்றும் பேரணிகள் நடத்தும்போது அதில் பேனர்கள் மற்றும் பதாகைகளை எடுத்துச் செல்வதாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து முன்வைப்புத் தொகையை பெற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனுமதி வழங்காததை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக உயர் …

Read More »

கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்!

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகளில்JN.1மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு …

Read More »

“மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை” – நிதி பகிர்வு விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: ‘மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது’ என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். இந்தக் …

Read More »

அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டம்..!!

சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழ்நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசானது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜன.7, 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. 2 நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொள்ள உள்ளன. தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் …

Read More »

வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை; இது தான் திராவிட மாடலா?: அன்புமணி கேள்வி

சென்னை: மது அருந்தியதை, தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற விவசாயி குடிகாரர்களால் குத்திக் கொலை செய்யப் பட்டிருக்கிறார். …

Read More »

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 …

Read More »