சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகளை விசாரணை முடியும்முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழக லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐஜி பிரமோத் குமார்அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: லஞ்சப் புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணையை முழுவதுமாக முடிக்கும் முன்னரே அவர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு மேற்பார்வை பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிவுறுத்துவதாகத் …
Read More »அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: தமிழகத்தில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேரவேலை தொடர்பான சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசி யிருந்தார். அதையடுத்து தமிழக அரசுமற்றும் முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் 4 அவதூறு வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த 4 வழக்குகளையும் …
Read More »ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்த அடிக்கல்; மாற்று திறனாளிகள் துறை சார்பில் பள்ளி கட்டிடம்: முதல்வர் திறந்துவைத்தார்
சென்னை: சேலத்தில், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் ரூ.6.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடியில் தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், சுகாதாரத்துறை சார்பில் ஓசூர் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திரூ.100 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை …
Read More »உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம்: அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
சென்னை: குறு, சிறு, தொழில் துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தரவரிசை பிரிவுக்கான …
Read More »போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்: அமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதி யுள்ளனர். இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.வி.பத்மநாபன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: 6 கோரிக்கைகளுக்கு தீர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களவை தேர்தல் …
Read More »4 நாட்களில் 3 முறை.. அத்துமீறிய இலங்கை கடற்படை! தமிழக மீனவர்களை மீட்க திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி …
Read More »கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க அவகாசம் கேட்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மாநகர …
Read More »அறிவிப்பு வெளியாகி 3 மாசம் ஆச்சு.. “உடனே கட்டணத்தை குறைங்க”.!! அரசுக்கு நினைவூட்டும் அன்புமணி.!!
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக …
Read More »“ஆளுநர்களின் அரசியலை வீழ்த்தும் தேவையை உணர்த்துவதாக திமுக இளைஞரணி மாநாடு இருக்கும்” – ஸ்டாலின் கடிதம்
சென்னை: “ஆளுநர்களின் அரசியலை வீழ்த்தும் தேவையை உணர்த்தக்கூடியதாக சேலம் இளைஞரணி மாநாடு இருக்கும்” என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.18) காலை தொடங்கி வைத்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “ …
Read More »“மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார். சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று …
Read More »