Breaking News
Home / செய்திகள் (page 123)

செய்திகள்

”ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது” – சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை மறுத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் உள்ளிட்ட 20 பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி …

Read More »

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 11மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (நவ. 8, 9) …

Read More »

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள்: செய்திகளை சுட்டிக்காட்டி முதல்வர் பெருமிதம்

சென்னை: கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் இருப்பதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில் கூறியிருப்பதாவது: கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் வெளியான ஒரு செய்தியில், ‘‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் …

Read More »

2024-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகளை கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: 2024-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு தமிழ்நாடு அரசுப ரிந்துரைகளை கோரியுள்ளது. அது தொடர்பான செய்தி குறிப்பில்:வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் (சீருடை பணியாளர்கள் உட்பட) மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். …

Read More »

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி …

Read More »

காட்டாங்குளத்தூரில் 21 ஏக்கர் ஏரி நிலம்.. பிளாட் போட்டு விற்கும் பிரபல நிறுவனம்.. அன்புமணி புகார்

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் 21 ஏக்கர் ஏரியை மனைகளாக்கி விற்பனை செய்யும் முயற்சியில் தனியார் நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றம்சாட்டி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் …

Read More »

மாதந்தோறும் உயர்த்தப்படும் ஆட்டோ எல்பிஜி கேஸ் விலை: ஓலா, ஊபர் போல் அரசு செயலியை உருவாக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில் ஆட்டோ எல்.பி.ஜி. கேஸ் விலையும் கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை உயர்ந்து இருப்பது வாடகை வாகன ஓட்டுனர்களை கவலையடைய செய்துள்ளது. சீரான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓலா, ஊபரை போன்று அரசே செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு உகந்த எல்.பி.ஜி. கேஸை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பயன்பாடு …

Read More »

ஆர்சிபியன்ஸ் தனியா இருந்தாதான் ஆபத்து.. கூட்டமா இருந்தா ஆபத்து இல்லை.. மேக்ஸ்வெல் மீம்ஸ்!

சென்னை; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இவர் எப்படிங்க இந்த மேட்சை வெற்றிபெற வைத்தார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத மேட்சில்.. உள்ளே புகுந்து ஆட்டத்தையே மேக்ஸ்வெல் மாற்றிவிட்டார் என்று நெட்டின்சன்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டிய ஒரு ஆட்டத்தில்.. அவர்களின் கையில் இருந்த வெற்றியை… அண்ணன் யூஸ் பண்ணிக்கிறேன் என்று கூறி ஆஸ்திரேலியா வெற்றியை …

Read More »

“மீண்டும், மீண்டும் சொல்கிறேன்…” – தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் மாநிலத்தில் தற்போது உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு, 65 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ‘நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த …

Read More »

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பாக சங்கப் பிரதிநிதிகளிடம் இன்று கருத்து கேட்பு

சென்னை: இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.8) நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய 5 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு …

Read More »