சென்னை: இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.8) நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய 5 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் வேறொரு நாளில் நடைபெறும் கூட்டத்துக்கு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.