சென்னை; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இவர் எப்படிங்க இந்த மேட்சை வெற்றிபெற வைத்தார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத மேட்சில்.. உள்ளே புகுந்து ஆட்டத்தையே மேக்ஸ்வெல் மாற்றிவிட்டார் என்று நெட்டின்சன்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டிய ஒரு ஆட்டத்தில்.. அவர்களின் கையில் இருந்த வெற்றியை… அண்ணன் யூஸ் பண்ணிக்கிறேன் என்று கூறி ஆஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது.
முக்கியமாக பள்ளி, கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆண்கள்.. வெறுமனே இருக்கும் போது இப்படி எல்லாம் அடித்து ஆடி அணியை வெற்றிபெற வைப்பதாக கனவு காண்பது உண்டு. பல ஆண்களும் இப்படி செய்து இருப்பார்கள். ஆனால் அதை மேக்ஸ்வெல் நேற்று நிஜத்தில் செய்து காட்டி இருக்கிறார். பலருக்கும் கனவாக இருக்கும் விஷயத்தை.. நடக்கவே நடக்காது என்ற விஷயத்தையும் கூட நேற்று மேக்ஸ்வெல் நிகழ்த்தி காட்டி உள்ளார்.
என்ன நடந்தது: நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்த ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டது.
முக்கியமாக இப்ராஹிம் சத்ரான் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடினார். சச்சின் ஸ்டைலில் இவர் ஆடிய சில ஷார்ட்டுகள், ஆங்கர் இன்னிங்ஸ் பெரிய அளவில் கவனம் பெற்றது. 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். 8 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசியில் வந்த ரஷீத் கான் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை அதிர வைத்தார் .
இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்து. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மேக்ஸ்வெல் அதிரடி: இதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடிய 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றியது.
மற்ற எந்த வீரரும் 30 ரன்கள் கூட தாண்டாத நிலையில் 201 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். அதிலும் கூட காலில் வலியோடு அவர் ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதை எல்லாம் வைத்துதான்.. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக ஆர்சிபி அணியில் இருந்து கொண்டு அவர் ஆடிய விதம்.. ஆர்சிபி அணியில் பல முறை சொதப்பிவிட்டு.. ஆஸ்திரேலியா அணியை வெற்றிபெற வைத்ததை எல்லாம் குறிப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
கால்கள் வலிக்க.. உயிரை பேட்டில் பிடித்துக்கொண்டு.. போராடி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்துள்ளார் மேக்ஸ்வெல். பொதுவாக இப்படி எல்லாம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று பொதுவாக சொல்லப்படும் ஒரு ஆட்டத்தில்.. ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்து ஆஸ்திரேலியாவின் செமி பைனல் சீட்டை உறுதி செய்துள்ளார் மேக்ஸ்வெல். இதைத்தான் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்