Breaking News
Home / செய்திகள் (page 48)

செய்திகள்

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கும் பணி ஆணைகளை உடனே வழங்குக: ராமதாஸ்

சென்னை: தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்வு செய்யப்பட்டோருக்கு 6 …

Read More »

நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு: பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன

சென்னை: தமிழகத்துக்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடக்க உள்ளன. இதை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் …

Read More »

எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் | இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்; இதயங்களை வென்றவர் என பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பங்கேற்று, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் …

Read More »

ஜன.24-ல் அலங்காநல்லூர் கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்.ஜல்லிக்கட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் …

Read More »

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்தது

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. …

Read More »

மருத்துவத்தை தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளன; மருத்துவ படிப்பை 3-ம் ஆண்டில் தொடர மாணவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: மருத்துவக் கல்வியைத் தாண்டி உலகில் வரம்பற்ற வாய்ப்புகள் பல உள்ளன என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த கோவை மாணவர் மூன்றாமாண்டில் படிப்பைத் தொடர அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த மாணவரான மனோஜ் கடந்த 2020 செப்டம்பரில் நீட் தேர்வு எழுதினார். அந்த தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை …

Read More »

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: ஆசிரியர் பணியிடங்களை அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பது அரசின் …

Read More »

மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம்…

17.01.2024கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற …

Read More »

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு

சென்னை: ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும்நடத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலியில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்துக்கான செலவின வரம்பை ரூ.5,000ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Read More »

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சியப் பதிவு குறித்த அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு எதிராக பழனிசாமி மான நஷ்டஈடு கோரி வழக்கு, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பிப்.1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Read More »