சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவானது. இந்த மழையால் தலைநகர் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் …
Read More »8 மணி நேரம் வேலை, பாதுகாப்பான பணியிடம் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜன.8 முதல் தொடர் வேலைநிறுத்தம்
சென்னை: பாதுகாப்பான பணியிடம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி 8-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(தமிழ்நாடு) மாநிலப் பொதுச்செயலாளர் இரா.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 6,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் 12 …
Read More »தமிழகம் முழுவதும் 7 வாரங்களாக நடந்த மருத்துவ முகாம்களால் 8 லட்சம் பேர் பயனடைந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் 7 வாரங்களாக நடந்த மருத்துவ முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணிஸ்வரர் நகர், ஜாபகர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மடுவின்கரை, கோட்டூர்புரம் பகுதிகளில் 7 தனியார் மருத்துவமனைகள் பங்கேற்ற மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் …
Read More »முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு பாரதி விருது; பாரதியாரை முழுமையாக அறிய அதிக ஆய்வுகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு பாரதி விருது வழங்கிய விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியாரை முழுமையாக அறிய அதிக ஆய்வுகள் தேவை என்று கூறினார். பாரதிய வித்யா பவன் மற்றும் மயிலை வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் 131-வது பிறந்த நாளையொட்டி 30-ம் ஆண்டு பாரதி திருவிழா சென்னையில் அடையாறில் உள்ள மத்திய கைலாசம் கோயிலில் கடந்த 9-ம் தேதி தொடங்கப்பட்டது. விழாவின் 2-வது நாளான …
Read More »தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் தலைமையில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு இன்று சென்னை வருகை
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை சென்னை வருகிறது. கடந்த டிச.4-ம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது ஒருசில இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் …
Read More »அனைத்து மக்களின் உரிமைகளை மதிப்போம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக மனித உரிமைகள் நாளில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நமது பொறுப்பை உணர்ந்து, அனைத்து மக்களின் உரிமைகளையும் மதிப்போம் என மீண்டும் உறுதியேற்போம். மனித உரிமைகளை மதிப்பதே நற்சமூகத்தின் வேராகும். ஆனால் நமக்கோ மனித உரிமை என்பது ஒரே பூமி, ஒரே …
Read More »புயல் பாதித்த 4 மாவட்டங்களில் வாகனங்களை பழுதுநீக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை – போக்குவரத்து துறை விளக்கம்
சென்னை: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் …
Read More »சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக திருப்புகழ் குழு பரிந்துரையை செயல்படுத்தியது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக திருப்புகழ் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் பெய்த தொடர் மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும், பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. மழைநீரும், கழிவுநீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவும், உறக்கமும் இல்லாமல் மக்கள் தவித்து …
Read More »சென்னை மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் தீ விபத்து: தீயணைப்புத்துறை இணை இயக்குநர் ஆய்வு
சென்னை: சென்னை அருகே மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணலியில் வயக்காடு பகுதியில் தனியார் சோப்பு பவுடர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் …
Read More »“மனித உரிமை மீறல்களை தடுப்போம்; மண்ணில் மனிதம் கப்போம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம். மண்ணில் மனிதம் காப்போம் என அனைவரும் இந்நாளில் உறுதியேற்போமாக என்று உலக மனித உரிமை நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர் திங்கள் 10-ஆம் நாள், உலக …
Read More »