சென்னை: சென்னை அருகே மணலி வாயக்காடு பகுதியில் தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணலியில் வயக்காடு பகுதியில் தனியார் சோப்பு பவுடர் குடோன் செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
ஆனால் தீ கொழுந்து விட்டு ஏறிய தொடங்கியதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிடங்கில் 12 மணி நேரமாக கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்து ஏற்பட்டுள்ள தனியார்கிடங்கின் அருகே இந்தியன் ஆயில் கேஸ்சிலிண்டர் தொழிற்சாலை உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் நேரில் சென்று தீயை அணைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.