சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காங்கிற்கு கடத்த முயன்ற ரூ. 2.33 கோடி மதிப்பிலான வைரங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் பாங்காங்கிற்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்துசென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காங் செல்லும் பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் பயணி ஒருவரது …
Read More »யாத்திரைக்கு விதிக்கும் தடையை அண்ணாமலை முறியடிப்பார்: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் உறுதி
சென்னை: பாஜக யாத்திரைக்கு எத்தனை தடைகள் விதித்தாலும், அதை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முறியடிப்பார் என்று கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டவும், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதை உரக்கச் சொல்லவும் ‘என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 29-ம் …
Read More »“அதிமுக, பாஜகவின் நப்பாசை பலிக்காது” – இரா.முத்தரசன் கருத்து
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஆனால், நிதிவழங்கியதாக தவறான தகவலை நாடாளு மன்றத்தில் தெரிவித்து வருகின்றனர். பாரபட்சமான முறையில் மத்திய அரசு செயல்படுவது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுக்கும் …
Read More »பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது – தேர்வுத் துறை
சென்னை: பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. அதன்படி பிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ம் தேதியும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் …
Read More »சென்னை | ரசாயனம் கலப்பதாக தகவல்: பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை: சென்னை, மெரினாவில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,000 பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சு மிட்டாயில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் (ரோடமென் பி) ரசாயனம் நிறத்துக்காக கலக்கப்படுவதாகவும், இதனால்எளிதில் புற்றுநோய் பரவுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர், …
Read More »‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி’ தொழில் முனைவோருக்கான களம் – ‘ஸ்டார்ட்அப் யுகத்தை புரிந்துகொள்ளல்’ வழிகாட்டு நிகழ்வு
சென்னை: தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும் நடத்திவரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்’ எனும் வழிகாட்டி நிகழ்வு, நாளை (பிப்.10, சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஃபேம் டிஎன், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் (FaMe TN, …
Read More »சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை: சென்னையில் கே.கே.நகர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத் துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கே.கே.நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …
Read More »துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலத்துக்கான பணிகள் தொடக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை: துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்குமேம்பாலத்துக்கான ஆரம்பக்கட்ட அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், நெடுஞ்சாலை துறை சார்பிலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்றுதலைமைச்செயலகத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது: …
Read More »‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை மூலம் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: டெல்லி போராட்டத்தில் காணொலியில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கவும், டெல்லி ஜந்தர்மந்தரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில், கேரள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஏற்கெனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவின் முயற்சிகளுக்கு தமிழகம் துணை நிற்கும் என்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்போராட்டத்தில், தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் …
Read More »நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (8.2.2024), நெடுஞ்சாலைத்துறையில், சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் பணிபுரியும் 14 சாலைப் பணியாளர்களை, அலுவலக உதவியாளராகப் பணிமாற்றம் (Transfer of Service) வழங்கி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் …
Read More »