சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. ஆனால், நிதிவழங்கியதாக தவறான தகவலை நாடாளு மன்றத்தில் தெரிவித்து வருகின்றனர்.
பாரபட்சமான முறையில் மத்திய அரசு செயல்படுவது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுக்கும் அதிமுக, பாஜகவின் நப்பாசை ஒருபோதும் பலிக்காது என்றார்.